For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்கெல்லாம் நாசாவில் இருக்க வேண்டிய ஆளுண்ணே.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

அதிக மழை பொழிவே டெங்கு அதிகமாக பரவ காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிக மழை பொழிவே டெங்கு அதிகமாக பரவ காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

நீர் ஆவியாமாகால் தடுக்க அணையில் தெர்மாகோளை போட்டு மூடியதிலிருந்தே அமைச்சர் செல்லூர் ராஜூவை காமெடியாக பார்க்க தொடங்கிவிட்டனர். அன்று முதல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று அதிக மழை பொழிவே டெங்கு காய்ச்சலுக்கு காரணம் என அமைச்சர் கூறியதை நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர். அவற்றில் சில..

கொசுவ கொல்ல முடிவு

புடிச்சிட்டேன் , இப்படியே கடி ஜோக் சொல்லியே கொசுவ கொல்ல தலைவன் முடிவு பண்ணிட்டான்.. என்கிறது இந்த டிவிட்

மழையை தடுக்க யோசனை

வானத்துக்கு கீழ பெரிய கொட்டகை போடச்சொல்லுங்க.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்

நாசாவில் இருக்கனும்

அண்ணே நீ இவ்வளவு நாளா எங்கண்ணே இருந்த, நியேல்லாம் நாசாவில் இருக்க வேண்டிய ஆளுண்ணே.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

அடுத்த கண்டுபிடிப்பா முடியல

அடுத்த கண்டுபிடிப்பா முடியல... என கூறுகிறது இந்த டிவிட்

எப்படி டெங்கு வரும்?

அய்யோ அய்யோ வெள்ளத்தில் தான் கொசு செத்துவிட்டதே அப்புறம் எப்படி டெங்கு வரும்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

கொசுவலை போட்ட போதும்

மிஷன் செல்லூர் ராஜூ.. தமிழ்நாட்டுக்கு ஒரு பெரிய கொசுவலை போட்டா போதும்.. டெங்கு பிராப்ளம் தீர்ந்தது.. என்கிறது இந்த டிவிட்

English summary
Minister sellur Raju said Dengue causes due to rain. Netizens making fun on Sellur Raju comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X