For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்..!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது ஆனால் முடியவில்லை என்றார்.

இதேபோல் அதிமுக எம்பி தம்பிதுரை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில

இதுவாத்தான் இருக்கும்

பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கு
பணம் இல்லை.
ஜெயக்குமார்
இந்த ஆண்டின் சிறந்த பஞ்ச் டயலாக்கு இதுவாத்தான் இருக்கும்

பணம்தான் இல்லை

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது ஆனால் முடியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
ஏன் அமைச்சரே பூனை எதாவது குறுக்க வந்துருச்சா??

அப்போ தெரியும் வலி

மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
எங்களோட வரிபணத்திலேயே ஊர்சுற்றும் நீங்களெல்லாம் 1லிட்டர் பெட்ரோலாவது காசுகொடுத்து போட்டுபாருங்க அப்போ தெரியும் எங்களோட வலி.

மலிவான அரசு

எந்தெந்த முறையில் மலிவு விலையில் பெட்ரோல், டீசல் தர முடியுமோ, அதை செய்து வருகிறோம் - தமிழிசை # இன்று முதல் "மலிவான அரசு" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்!

மனசு மாறிடுவோமா?

"பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது, பணம் இல்லையே!" - ஜெயக்குமார்
இப்படி பஞ்ச் பேசினா மனசு மாறிடுவோம்னு மட்டும் நினைக்காதீங்க - மக்கள்

குட் காம்பினேஷன்

"பெட்ரோல் விலையை குறைக்க மனம் இருக்கிறது, பணம் இல்லையே!" - ஜெயக்குமார்#பணம் மனம் குட் காம்பினேஷன்..!

சராசரி மனிதன் எப்படி?

பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சரே ஏற்றுக்கொள்ள முடியாதபோது சராசரி மனிதன் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வான்..!

English summary
Netizens making fun of political leaders statement on pretrol diesel price hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X