For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: தீர்ப்புன்னா இப்படித்தான் இருக்கனும்.. நெட்டிசன்கள் சொல்வதை பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதி-முழு விபரம்- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், ஹைகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என கூறிவிட்ட நிலையில், மற்றொரு நீதிபதி சுந்தர், சபாநாயகர் செயல் உள்நோக்கத்துடன் கூடியது என்றும், இயற்கை நீதிக்கு மாறானது என்றும் தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து வழக்கு 3வது ஒரு நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகி வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதால், அதுகுறித்த கருத்துக்களை சோஷியல் மீடியாவில் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    சில நெட்டிசன்களின் கமெண்ட்டுகளை பாருங்கள்.

    முதலிலேயே 5 நீதிபதிகள்

    முதலிலேயே 5 நீதிபதிகள்

    இனி இது போன்ற வழக்குகளில், ஒரே அமர்வாக 5 பேர் கொண்ட நீதிபதிகள் நியமன செய்து, இறுதி தீர்ப்பு வேண்டும். அப்பீல் இல்லை என்ற நிலை வரவேண்டும். இவ்வாறு இந்த நெட்டிசன் ஐடியா சொல்கிறார்.

    இரு மாதிரி

    இரு மாதிரி

    தீர்ப்பு ன்னா இப்படி தான் இருக்கணும்... ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், ஈயம் பூசாத மாதிரியும் இருக்கணும். இவ்வாறு கவுண்டமணி டயலாக்கை நினைவுபடுத்துகிறார் இந்த நெட்டிசன்.

    ரம்ஜான் தேதி மாதிரி

    ரம்ஜான் தேதி மாதிரி

    இந்த ரம்ஜான் விடுமுறை நாளும் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு போல் (முரண்பட்டு) மாறி விடுகிறதே!.. என்கிறார் இந்த நெட்டிசன். வெள்ளிக்கிழமை என முதலில் முடிவு செய்து பிறை தெரியாத நிலையில் சனிக்கிழமை ரம்ஜான் தேதி மாற்றப்பட்டுள்ளதை தீர்ப்புடன் டைமிங்காக ஒப்பிட்டுள்ளார் இவர்.

    மக்கள் நிலை

    மக்கள் நிலை

    சாதகமான தீர்ப்பு வந்தால் 'நீதி நிலை நாட்டப்பட்டது' என்றும்.. மாறாக வந்தால் மத்திய அரசு தலையீடு என்பதும்தான் இங்கே நடுநிலை.! என்கிறார் இந்த நெட்டிசன். தீர்ப்பை விமர்சிப்பவர்களுக்கு எதிரான கருத்து இது.

    சாமானியன் பார்வை

    சாமானியன் பார்வை

    எல்லா நீதிபதிகளும் ஒரே மாதிரியான சட்டத்தை படிக்கும்பொழுது தீர்ப்பு மட்டும் வேறு,வேறு எந்த வகையில் சரி? சாமானியனின் பரிதாப கேள்வி? என்று கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens asking doubts over yesterday High Court Judgement on 18 MLAs qualification case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X