• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேப்டன் தி கிரேட்.. கேலி, கிண்டல் செய்தவர்களையும் வாயடைக்க வைத்த விஜயகாந்த்!

By Veera Kumar
|

சென்னை: சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயல்பாடுகளையும், அவரது மனித நேய நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிப்போருக்கு, அவர் மீதான மரியாதை தானாக அதிகரித்துள்ளது.

இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விஜயகாந்த்தை கேலி செய்து மீம்ஸ் போட்டோரும் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள். சிலர் மனதை மாற்றிக்கொண்டு விஜயகாந்த்தை உயர்த்தி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

சர்தார்ஜி ஜோக்குகள் எப்படி ஒரு இனத்தை குறிவைத்து உருவாக்கப்பட்டனவோ அவ்வாறே, கேப்டன் என்று தேமுதிகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை குறிவைத்தும் ஜோக்குகள் கிளம்பின. அல்லது, கிளப்பிவிடப்பட்டன.

தரம் தாழ்ந்த விமர்சனங்கள்

தரம் தாழ்ந்த விமர்சனங்கள்

ஒருகட்டத்தில் இது எல்லைமீறிப்போனது. வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத அளவுக்கு, விஜயகாந்த் மட்டும் கட்டம் கட்டப்பட்டார். இது காமெடிக்காக செய்யப்படுகிறதா, அல்லது அரசியல் தூண்டுதல் காரணமாக உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனங்கள் விஜயகாந்த்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டன.

குடிகாரர் போல சித்தரித்தனர்

குடிகாரர் போல சித்தரித்தனர்

விஜயகாந்த்தை ஏதோ பிறவி குடிகாரர் போல சித்தரித்து வந்த மீம்ஸ்கள்தான் அபத்தத்தின் உச்சம். சானியா மிர்சாவை சோனியா என விஜயகாந்த் புரிந்துகொள்வது போலவும், கோல்கேட் ஊழலை கோல்கேட் பேஸ்ட் என புரிந்துகொள்வது போலவும் எல்லாம் கேலி சித்திரங்களை பேஸ்புக், வாட்ஸ்சப், டிவிட்டரில் ஒரு குரூப் தொடர்ந்து பரப்பியது. பிறகு நடுநிலையாளர்களும் கூட அதை ஷேர் செய்து புழகாங்கிதம் அடைந்தனர். விஜயகாந்த் மது குடிப்பது உண்மைதானா, மக்கள் பணிகளுக்கு அதனால் இடைஞ்சல் ஏற்பட்டதா, அல்லது குடிக்காத தலைவர்களைதான் நாம் ஆதரித்துவருகிறோமா என்றெல்லாம் கேலி செய்தவர்கள் யோசிக்கவில்லை.

கனிவான கவனம்

கனிவான கவனம்

விஜயகாந்த் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது., இனி வரும் தேர்தலில் அவர் நிலை அவ்வளவுதான் என்று ஆரூடம் கணித்தனர் பலர். ஆனால் இப்போது நிலைமை திடீரென தலைகீழாகிவிட்டது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் இறுதி சடங்கில் விஜயகாந்த் பங்கேற்றபிறகுதான், தமிழக வலைத்தளவாசிகளின் கனிவான கவனத்திற்கு விஜயகாந்த் உள்ளாகியுள்ளார்.

நிருபர்களுடன் நெகிழ்ச்சி

நிருபர்களுடன் நெகிழ்ச்சி

விஜயகாந்த் விளம்பரமே இல்லாமல் சமீப நாட்களாக மேற்கொண்ட சில செயல்களை பார்த்தோம் என்றாலே மக்களின் மாற்றத்திற்கு காரணம் தெரியும். விஜயகாந்த் செய்தியாளர்களிடம் எப்போதும் சண்டைபோடுபவர் என சித்தரிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் கோயம்பேடு அருகேயுள்ள ஒரு கிளப்பில், தான் நடிக்க வந்த புதிதில் ஆதரவு தந்து தூக்கி நிறுத்திய அந்த கால சினிமா பத்திரிகையாளர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து அளித்து, குடும்ப நலன்களை கேட்டு அறிந்து கொண்டார்.

ஈழ உணர்வாளர்

ஈழ உணர்வாளர்

தற்போதுள்ள பல அரசியல் கட்சிகள் ஈழப் பிரச்சினையில், சூழ்நிலைக்கு தக்கபடி வேடமிடுகின்றன. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் முன்பே இலங்கை தமிழர்களின் கஷ்டம் தீரும்வரை பிறந்தநாள் விழா கொண்டாட மாட்டேன் என்று சபதம் எடுத்தவர் விஜயகாந்த். பிரபாகரன் மீது கொண்ட மரியாதை, அன்பு காரணமாகவே, தனது திரையுலகின் முக்கியமான 100வது திரைப்படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், தனது முதல் மகனுக்கும் பிரபாகரன் என்றே பெயர் சூட்டியுள்ளார்.

நிஜத்திலும் ஹீரோயிசம்

நிஜத்திலும் ஹீரோயிசம்

கருணாநிதி திரைப்படத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றபோது கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பொன்விழா கொண்டாடினார்கள். அப்போது எதிர்பாராமல் விழா மேடை சரிந்தபோது, ரிஸ்க் எடுத்து, பெண்களை பாதுகாப்பாக அழைத்து காப்பாற்றியவர் விஜயகாந்த்.

கோபம்தான் பலமே

கோபம்தான் பலமே

விஜயகாந்த்தின் பலம் மற்றும் பலவீனம் அவரது கோபம்தான். பிறரை போல பொய்யாக நடிக்க தெரியாமல், தவறுகளை உடனே கண்டிப்பதை பார்த்து, எத்தனையோ பேர் உள்ளத்தில் அவர் தனி இடம் பிடித்துள்ளார். ஆனால், அவருக்கு ஆகாதவர்கள்தான், கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோவை திரும்ப திரும்ப காண்பித்து வில்லன்போல சித்தரிக்கின்றனர். அதேநேரம் கோபத்தை தூண்டும் அளவுக்கு அந்த இடத்தில் என்ன நடந்ததோ அது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

கலங்கிய கண்கள்

கலங்கிய கண்கள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் இறுதி சடங்கு நடைபெற்றபோது, ஆரம்பம் முதல் முடியும்வரை அங்கேயே இருந்து அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த். மேலும், கலாமின் உடலை பார்த்து விஜயகாந்த் கண்கள் அவரை அறியாமலே கலங்கின. அந்த கலங்கிய கண்களில் நடிப்பு தெரியவில்லை என்றே போட்டோவை பார்த்தவர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

கவனம் ஈர்த்தார்

கவனம் ஈர்த்தார்

கலாம் இறுதி சடங்கிற்கு உச்ச சினிமா நட்சத்திரங்கள் என்று தமிழர்கள் கொண்டாடும் பலரும் போகவில்லை. நடிகைகளும் போகவில்லை. முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதியும் போகவில்லை. இந்நிலையில்தான் விஜயகாந்த் முன்னே நின்று அஞ்சலி செலுத்தியதை பார்த்த தமிழ் வலைத்தளவாசிகள் விஜயகாந்த் குறித்து நல்லவிதமாக யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் நாகரீகம்

அரசியல் நாகரீகம்

அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்த அரசியல் எதிரியான பாமகவின் அன்புமணி ராமதாஸ் கையை பிடித்து தனது இருக்கையின் அருகேயே விஜயகாந்த் அமரச் செய்ததும் பலரது கவனத்தை ஈர்த்தது. அந்த பரபரப்பான சூழ்நிலையிலும், பிரதமர் மோடியை சந்தித்து, கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்துவிட்டார் விஜயகாந்த்.

வினுசக்கரவர்த்தி

வினுசக்கரவர்த்தி

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகரான வினுச்சக்கரவர்த்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருந்த தகவல் கிடைத்ததும், ஓடோடிப்போய், அவரது கைகளை பற்றிக் கொண்டு ஆறுதல் சொல்லி, தைரியமூட்டினார். கடும் உடல் நல பாதிப்பில் இருந்த வினுச்சக்கரவர்த்தி, விஜயகாந்த் அளித்த மனத்தெம்பால்தால் விரைவில் தேறினார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். வினுசக்கரவர்த்தியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள் பலர் ஆஸ்பத்திரி பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

ஆறுதல்

ஆறுதல்

மேலும், மது விலக்கு போராளியான சசிபெருமாள் குடும்பத்தாரிடம், நான் உங்கள் வீட்டின் மூத்த பிள்ளை என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறினார் விஜயகாந்த். வெறும் பேச்சோடு நிற்காமல், கட்சியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணத்தையும் வழங்கியுள்ளார் விஜயகாந்த். எங்கெல்லாம் ஆறுதலும், உதவியும் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் விஜயகாந்த் முன்னால் நிற்கிறார். இதையெல்லாம் கவனித்து பார்த்துவிட்டுதான், அவரை இதுநாள் வரை கேலி செய்தோரும்கூட, 'கேப்டன் தி கிரேட்' என்று புகழ தொடங்கியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tamil netizens opinion on Vijayakanth has been changed after they observe him closely.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more