For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடிசப்தம்..நில அதிர்வு.. எங்க திண்டுக்கல்லில் என்ன செய்துகிட்டிருக்கீங்க? வெடிக்கும் நெட்டிசன்ஸ்

எங்க திண்டுக்கல்லில் என்ன செய்துகிட்டிருக்கீங்க? என வெடிக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    திண்டுக்கல் மாவட்டத்தில் மிக லேசான நில அதிர்வு

    திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மக்களை பெருங்குழப்பத்தில் தள்ளியிருக்கிறது இன்று காலை கேட்ட பயங்கர வெடிசப்தமும் நில அதிர்வும்... இப்போது, எங்க திண்டுக்கல்லில் என்ன செய்துகிட்டு இருக்கீங்க என மத்திய, மாநில அரசுகளைப் பார்த்து நெட்டிசன்கள் கேள்வி கேட்டு #savedindigul என ஹேஷ்டேக்குகளையும் உருவாக்கி உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலையில் நில அதிர்வு உணரப்பட்டது. ஆனால் பயங்கர வெடிசப்தத்துடன் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

    Netizens raise doubts over tremors in Dindigul

    பூமிக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்வுதான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் வெடிசப்தம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

    Netizens raise doubts over tremors in Dindigul

    திண்டுக்கல் மாவட்ட மக்கள் இப்போது இதைத்தான் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். திண்டுக்கல் தொடர்பான ஃபேஸ்புக் பக்கங்களில் எங்க திண்டுக்கல்லை என்ன செய்யப் போறீங்க என்றும் என்ன செய்து கிட்டு இருக்கீங்க என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

    Netizens raise doubts over tremors in Dindigul

    மத்திய அரசின் அடுத்த இலக்கு திண்டுக்கல் மாவட்டம்தானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் Sãämý Vj Âddíçt என்பவர் Vedasandur அருகே ரெங்கமலை யில் தான் அந்த வெடி சத்தம்... காரணம் அந்த மலையின் உள்ளே கனிம வளம்(தங்கம்) உள்ளதால் அதை வெளியே எடுக்க அரசு உத்தரவின் பேரில் வேலைப்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    Netizens raise doubts over tremors in Dindigul
    English summary
    Netizens are raising doubts over tremors in Dindigul
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X