For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடியூரப்பா தான் யோகக்காரர்.. எப்போ வேண்டுமானாலும் தமிழக முதல்வராக அறிவிக்கப்படலாம்! நெட்டிசன்ஸ் ரகளை

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை கண்டித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்தவர் குறித்து நெட்டிசன்கள்

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை கண்டித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

    சூரப்பா வழியாக

    தண்ணீரில் காவிய கலக்க முடியாது, அதனால் சூரப்பா வழியாக கலப்போம் - ?

    தமிழகத்துக்கு எதிராக

    ஒன்று மட்டும் உறுதி. தமிழகத்துக்கு எதிரான அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பது என்பதுதான் அது.
    பாஜக ஒன்றை உறுதியாக நம்புகிறது.
    இனி தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று.
    எனவே இனி தமிழகத்துக்கு எதிராகவே தான் இருக்கும்.

    எடியூரப்பா யோகக்காரர்

    எடியூரப்பா தான் யோகக்காரர்.. எப்போ வேணும்னாலும் தமிழக முதல்வராக அறிவிக்கப்படலாம்...

    ஊழல்வாதிகளை

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக, கர்நாடகாவைச் சேர்ந்த #சூரப்பா நியமனம்
    தமிழகம் திறமை இல்லாத மாநிலம் என மறைமுகமாக
    ஆளுநர் நமக்கு சொல்லி கொண்டு இருக்கிறார்,
    அதுவும் உண்மை தான் சிந்திக்கும் திறமை இருந்து
    இருந்தால் ஊழல்வாதிகளை ஆட்சி செய்ய தேர்ந்து எடுப்போமா?

    புறக்கணிக்கப்படுகிறான்

    இசை பல்கலைக்கழகத்துக்கு ஒரு மலையாளி,சட்ட பல்கலைகழகத்துக்கு ஒரு தெலுங்கர்,அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு கன்னடர் துனை வேந்தர்களாக நியமனம். தமிழனின் அறிவை உலகம் போற்றுகிறது.
    ஆனால் இங்கோ தன் சொந்த நாட்டில் தமிழன் புறக்கணிக்கப்படுகிறான்.

    English summary
    Netizens sharing their views on Anna university vice chancelor appointment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X