For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதி தேவதை கண்ணில் கட்டிய துணி, இன்று நழுவி அவள் கழுத்தை நெருக்கியது! நெட்டிசன்ஸ் வேதனை

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மே 14ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் குறித்தும் உச்சநீதிமன்றம் எதுவும் கேட்கவில்லை.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..

தத்தளிக்கின்றது

காவிரி விவகாரம்: கர்நாடகாவின் பக்கம் மத்திய அரசு, மத்திய அரசின் பக்கம் உச்சநீமன்றம்.
தமிழகம்
தனியாக
தண்ணீர் இல்லாமல்
தத்தளிக்கின்றது. . .

கழுத்தை நெருக்கியது

நீதி தேவதை கண்ணில் கட்டிய துணி, இன்று நழுவி அவள் கழுத்தை நெருக்கியது!

வழங்கா நீதி

வளைந்த அரசு;
வழங்கா நீதி,
வளையா காவிரி;
விளையா நிலம்,
விளையாட்டாய் நாம்!
விடை மே 14 ஆம்
காத்திருப்பாம்!!!!!!!!!
உயிர் போகா வரை.....

ஆடி பெருக்கு

மே14ம் தேதிக்கு காவிரி வழக்கு ஒத்திவைப்பு, வரைவு திட்டத்தை 14ம் தேதி தாக்கல் செய்யவேண்டும்.
So, ஆடி பெருக்குக்கு காவிரில தண்ணீர் வரும்!

ஒரே காமெடிதான்

அட போங்கடா யப்பா நீங்க தண்ணீ தரமுடியாதுனு சொல்லுறதும் இவிங்க வழக்கு மேல வழக்க போடுறதும் ஒரே காமெடி தான் போங்க கடைசி வரை காவிரி நீர் எங்களுக்கு கானல் நீர் தான்ல கொஞ்ச கூட மனசாட்சியே இல்லையா அரசியல் பண்ண வேற இடமா இல்ல உழவனும் உழைப்பாவனும் தானா கிடைத்தான் _ஆத்திரப்பட்டு என்ன பயன்?

English summary
Netizens sharing their views on Cauvery issue. Supreme court gives time to central govt till 14th may.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X