For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா? கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசனின் கட்சியின் பெயருக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு குவிந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil

    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் கட்சியின் பெயருக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு குவிந்து வருகிறது.

    நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தொடக்கத்திலேயே கட்சி கொடியை ஏற்றி வைத்த நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார்.

    அனைத்து கட்சிகளையும் தனது கொடியில் கொண்டுள்ள கமல், தாமரைக்கு இடம் கொடுக்கவில்லை என பலர் பாரட்டி வருகின்றனர். அவற்றில் சில

    என் கண்ணு வேணும்னு

    தமிழக அரசியல்வாதிகளை பார்த்து கமலின் பஞ்ச்.. என் கண்ணு வேணும்னு சொன்னீங்களாமே....????
    #மக்கள்_நீதி_மய்யம் என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

    கண்டிப்பா ஹிட் ஆகும்

    #மக்கள்நீதிமய்யம்.. கண்டிப்பா ஹிட் ஆகும்.. என்கிறார் இந்த நெட்டிசன்

    நீதியும் இருக்கும்

    கமலின் புதிய கட்சி " மக்கள் நீதி மய்யம்".
    மக்களும் இருப்பாங்க நீதியும் இருக்கும்
    மய்யம் மட்டும் மாயமாகமல் இருந்தால் சரிதான்.. என்கிறார் இந்த வலைஞர்

    அதுதான் நமக்கு முக்கியம்

    கருப்பு, சிவப்பு, வெள்ளை, நட்சத்திரம், கை சின்னம்.
    ஒரே கொடில எல்லா கட்சியையும் கொண்டு வந்துட்டாரு.
    ஆனா இதுல கூட தாமரை மலரவில்லை, இல்லை.
    அதுதான் நமக்கு முக்கியம்.. என்கிறது இந்த டிவிட்

    இலுமிநாட்டி காட்சின்னு

    கொடில 6 கை இருக்கு, ஸ்டார் இருக்கு இது ஒரு இலுமிநாட்டி காட்சின்னு வருவானுங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்

    யார் என்று புரிகிறதா?

    கொடி பறக்குதா.. யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா பல தடைகளை வென்று சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? என்கிறார் இந்த வலைஞர்

    English summary
    Netizens sharing their views on Kamal's Party. Kamal has lauched his party. his party name is Makkal Neethi Maiyam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X