For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹேய்.. வாயு புயலே நீ வரியா இல்லையா? உன் சப்போர்ட்டரையாவது அனுப்பு.. ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Vayu: வாயு புயல்.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை..சென்னைக்கு எப்படி?- வீடியோ

    சென்னை: வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து அம்மாநில மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்திருக்கின்றனர் மக்கள். இந்நிலையில் மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அரபிக்கடலில் உருவானது வாயு புயல்.

    இந்த புயல் குஜராத்தை தாக்கும் என முதலில் கூறப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால் வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்

    இந்த ஆண்டும் வரவில்லையே

    இந்த ஆண்டும் வரவில்லையே

    இந்நிலையில் வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்வதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மக்கள் இந்த ஆண்டும் புயல் வரவில்லையே என ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மக்கள் நிம்மதி பெருமூச்சு

    குஜராத்தின் கடலோரப் பகுதியிலுள்ள மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் வாயு புயல் திசை மாறிவிட்டது, குஜராத்தில் புயல் கரையை கடப்பதற்கான சாத்தியம் இல்லை, அது செல்லும் திசையை பொறுத்து ஓமனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சவுராஷ்டிரா கடலோரப் பகுதி

    அதிதீவிர புயலாக மாறியது வாயு. சவுராஷ்டிரா கடலோர பகுதிகளை தாக்குகிறது.

    நீந்தி கரை சேரும் மீனவர்

    வாயு புயலால் வேரவால் பகுதியில் பல அடி உயரத்துக்கு எழும் அலைகள்.. படகு மூழ்கியதால் நீந்தியபடி கரை சேரும் மீனவர்

    சிங்கங்களின் கதி என்ன?

    வாயு புயலால் 2.8 லட்சம் குஜராத் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிர் காடுகளில் உள்ள சிங்கங்களின் கதி என்ன?

    இவர்களை பார்த்து புயலுக்கே பயம்

    வாயு புயல் திசை மாறிவிட்டது, குஜராத்தை தாக்காது. மோடி அமித் ஷா நடையை பார்த்து இயற்கைகூட பயந்து விட்டது என்கிறார் இந்த நெட்டிசன்.

    நன்றி சக்திமான்

    வாயு புயலை சக்திமான் ஊதியே அனுப்பிவிட்டாராம்.. நன்றி சக்திமான் என்கிறார் இந்த நெட்டிசன்

    இயற்கை கைவிட்டுவிடும்

    நீங்கள் இயற்கையை கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டுவிடும் என்கிறார் இந்த நெட்டிசன்.

    படுத்தேவிட்டார்கள்

    மேற்கு குஜராத் மக்கள் புயலுக்காக 2015ஆம் ஆண்டு முதல் காத்திருக்கின்றனர்.. தற்போது படுத்தே விட்டார்கள்.. என கூறி கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்

    வர்யா இல்லையா?

    ஹேய்.. வாயு புயலே நீ வர்யா இல்லையா.. நீ வர விரும்பினால் உன்னை யாரும் தடுக்க முடியாது.. ஆனால் தயவு செய்து உன்னுடைய ஆதரவாளரான மழையை அனுப்பி விடு என்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens sharing their views on Vayu Cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X