For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோஹ்லி வின்ஸ்... கும்ப்ளே ரிஸைன்ஸ்.. வலைதளங்களில் கொதிக்கும் நெட்டிசன்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே ராஜினாமா செய்தது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே ராஜினாமா செய்தது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது தலைமை பயிற்சியாளர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பதவியை நீட்டிப்பு செய்யக்கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கும்ப்ளேவின் திடீர் ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏராளமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

பெரிய போராளி...

தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல்... கோஹ்லி வின்ஸ், கும்ப்ளே ரிஸைன்ஸ்.. இந்தியா உங்களை வணங்குகிறது... பெரிய போராளி... என்கிறார் இந்த வலைஞர்..

ஜென்டில்மேன்கள் வழியில்..

கும்ப்ளே ஜென்டில்மேன்கள் வழியில் நடக்கிறார்... என்கிறார் இந்த நெட்டிசன்..

யோகா செய்யதான்..

யோகா இந்த முழு உலகத்தையும் இணைக்கிறது.. கும்ப்ளே தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது கூட அமைதியாக யோகா செய்யதான் என்கிறார் இந்த நெட்டிசன்..

துக்கமான நீக்கம்

கும்ப்ளே ரன் அவுட் ஆகிவிட்டார்.. தற்போது கோஹ்லிதான் தொடர்ந்து ஆடி இந்தியாவை வெற்றி பெற செய்ய வேண்டும்.. முக்கியமான சந்தர்ப்பத்தில் துக்கமான நீக்கம்.. என்கிறார் இந்த வலைஞர்..

ஒரு சோகமான நாள்

இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு சோகமான நாள்... என்கிறார் இந்த நெட்டிசன்...

ஷேவாக் கோச்சாக வந்தால்?

கும்ப்ளே போன்ற ஒருவரிடமே கோஹ்லிக்கு பிரச்சனை இருந்தால், ஷேவாக் கோச்சாக வந்தால் என்ன செய்வார்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்..

English summary
Netizens exposing their shock after Anil Kumble resigns as the head coach of Indian cricket team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X