• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதோ நினைத்து.. பேசக் கூடாததை பேசி இப்படி சிக்கிக்கொண்டாரே மோடி!

|
  PM Modi Interview: ஏதோ நினைத்து.. ஏதோ பேசி நெட்டிசன்களிடம் சிக்கிய மோடி- வீடியோ

  டெல்லி: மேகமூட்டம் இருந்தால், விமானங்களை ரேடாரால் கண்டுபிடிக்க கஷ்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை, நெட்டிசன்கள், பயங்கரமாக மோடியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

  பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது, மேகமூட்டம் உள்ள காலகட்டத்தில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று தான்தான் அறிவுறுத்தியதாக பிரதமர் மோடி அளித்த ஒரு பேட்டி வைரலானது.

  ரேடாரிலுள்ள தொழில்நுட்பம், எந்த மேகமூட்டம், மழைப்பொழிவு இருந்தாலும், விமானங்களை கண்டறியமுடிவதாகும். ஆனால் பிரதமரே இப்படி ஒரு சரியற்ற தகவலை பொதுவெளியில் ஷேர் செய்துவிட்டார் என கிண்டல்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ பேட்டியையே டெலிட் செய்துவிட்டது பாஜக. ஆனாலும், விடாமல் துரத்துகிறது கிண்டல்கள். இதோ சிலவற்றை நீங்களே பாருங்கள்.

  நிலவு பெரிதாக இருக்கும்ப்பா

  "நிலவு ஆய்வுக்கு இஸ்ரோ ரெடியாக இருக்கவில்லை. நிபுணர்களுக்கே சந்தேகங்கள் இருந்தன. ஆனால், பவுர்ணமி நாளில், நிலவை ஆய்வு செய்யுங்கள். அப்போதுதான் நிலவு நல்லா பெருசா இருக்கும். நீங்கள் போய் தரையிறங்க நிறைய இடம் கிடைக்கும்" இப்படித்தான் மோடி சொல்லியிருப்பார் என்று கலாய்க்கிறது இந்த ட்வீட்.

  நல்லவேளை இதை சொல்லவில்லை

  போர் விமானங்கள் புறப்பட ஆலோசனை வழங்கினேன் என்று மோடி கூறிய நிலையில், அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட்டே நான்தான் என்று சொல்ல, மோடி நெருங்கிவிட்டார் என்று கிண்டல் செய்கிறது இந்த ட்வீட்.

  குண்டு போட்டிருக்கலாமே

  காங்கிரஸ் சமூக வலைத்தள தலைவர் திவ்யா ஸ்பந்தனா கூறுகையில், மேகம் இருக்கிறதோ இல்லையோ, ரேடார்களால் விமானத்தை கண்காணிக்க முடியும். இப்படித்தான் பல தசாப்தங்களாக ரேடார்கள் செயல்படுகின்றன. அப்படி இல்லாவிட்டால், மேக மூட்டம் இருக்கும் நாளில், பிற நாட்டு விமானங்கள் எளிதாக குண்டு போட்டுவிட்டு போய்விடும். கடந்த காலத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தால் (நேரு, ராஜிவ் காந்தி பற்றிய மோடி குற்றச்சாட்டுகள்) இப்படித்தான் உங்கள் நிலைமை ஆகும். இவ்வாறு கூறியுள்ளார்.

  இதுவா அந்த ரேடார்

  பாகிஸ்தான் ரேடார் இதுவாக இருக்குமோ என்று டிடிஎச் படத்தை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன். ஏனெனில், மேகமூட்டம், மழை காரணமாக சிக்னல் இல்லாமல் போவது டிடிஎச்சில்தானே தவிர ரேடாரில் இல்லை என்று கிண்டல் செய்கிறார் இவர்.

  வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்

  பாலகோட் விமான தாக்குதலுக்கு முன்பாக, மோடி இப்படித்தான், வானத்தை பார்த்திருப்பார். மேக மூட்டம் இருந்ததும், விமானங்கள் கிளம்ப உத்தரவிட்டிருப்பார் என கிண்டல் செய்கிறது இந்த ட்வீட்.

  மல்லையா ஓட்டம்

  ஓஹோ.. இப்போதான் தெரியுது. விஜய் மல்லையா போன்றோர் இந்தியாவை விட்டு எப்படி தப்பினர் என்பது.. அவர்கள் விமானத்தில் சென்ற நாள், மேகமூட்டமும், மழையுமாக இருந்திருக்கும் என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன்.

  விளையாட்டு விஷயம் இல்லை

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்வீட்டில், தேசிய பாதுகாப்பு என்பது இப்படியாக அலட்சியமாக கையாளும் துறை கிடையாது. மோடியின் இந்த பொறுப்பற்ற பேச்சு சரியற்றது. இதுபோன்ற ஒருவர் இந்தியாவின் பிரதமராக தொடரக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  English summary
  Netizens troll Modi for his radar speech, here are some tweets you can find.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X