For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுத்தை சிக்கிருச்சே.. மோடி பிரஸ் மீட்டை ஜாலியாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நெட்டிசன்கள் மோடியின் பிரஸ் மீட்டை பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்- வீடியோ

    சென்னை: எந்த நேரத்தில் பிரதமர் மோடி பிரஸ்மீட் செய்தாரோ, இணையம் முழுக்க நேற்று முதல் இதே பேச்சுதான். 5 வருடங்களில் முதல் முறையாக பிரஸ் மீட் செய்த பிரதமர் ஏதேதோ சொல்வார் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்க, அவரோ எதுவும் பேசாமல் எழுந்து சென்ற அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை திருவாளர் பொதுஜனம்.

    தங்கள் ஆதங்கத்தை #PressConference என்ற டேக் உருவாக்கி, டிவிட்டரில் கொட்டித் தீர்த்தனர் நெட்டிசன்கள். மேகம், ரேடார், டிஜிட்டல் கேமரா, இமெயில் என வரிசையாக நெட்டிசன்களின் ஹாட் கேக்காக மாறிவிட்ட மோடியின் நேற்றைய பிரஸ் மீட், அந்த கேக்கில் வைத்த செர்ரி பழம்போல முத்தாய்ப்பாய் அமைந்தது.

    நெட்டிசன்கள் மோடியின் பிரஸ் மீட்டை பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ரவுண்டு போய் பார்க்கலாம், வாங்க:

    'டைம்' இதழ் என்னைப் பற்றி ஏன் அப்படி கட்டுரை வெளியிட்டது தெரியுமா? மோடி பதில் இதுதான் 'டைம்' இதழ் என்னைப் பற்றி ஏன் அப்படி கட்டுரை வெளியிட்டது தெரியுமா? மோடி பதில் இதுதான்

    உடல்மொழி வேறுபாடு

    உண்மையான பேட்டியின்போதும், ஏற்கனவே தயாரித்து உருவாக்கப்பட்ட சிறப்பு பேட்டிகளின்போதும், மோடியின் உடல் மொழியில் ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பதை பாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று, சொல்கிறார் இந்த நெட்டிசன்.

    கிண்டலுக்கு பதில்

    கர்மா விடாது என்பார்கள். 5 வருடங்கள் முன்பாக மன்மோகன்சிங்கை, மவுனமோகன் என கிண்டல் செய்த மோடி, இப்போது மவுனமாக இருக்கிறார் என்று கேலி செய்கிறார் இந்த நெட்டிசன்.

    தோழியுடன் பேச்சு

    தோழியிடம் நம்மை பேச விடாமல் லொட லொடவென கூட இருக்கும் நண்பனே பேசிக் கொண்டிருப்பதை போல, மோடியை பேசவிடாமல் அமித்ஷாவே முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று கூறுகிறது இந்த ட்வீட்.

    சிறுத்தை சிக்கிருச்சே

    மன்கி பாத் போன்ற ரேடியோ உரையாடல் நிகழ்ச்சியில் சீறிய சிறுத்தை போல காட்சியளித்த மோடி, பிரஸ் மீட்டில், 2வது படத்தில் உள்ள சிறுத்தை போல சிக்கிக் கொண்டதாக கிண்டல் செய்கிறது இந்த மீம்.

    English summary
    Netizens troll Narendra Modi for his first ever press meet where he didn't took any question from the journos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X