For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட்லிக்கு பருப்பு இல்ல, அப்புறம் எதுக்கு உங்களுக்கு பொறுப்பு... நெட்டில் வறுபடும் உளுந்தம் பருப்பு!

ரேஷனில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தொடர்ந்து டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ரேஷனில் உளுந்தம் பருப்பே தான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை என்று அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளதற்கு தொடர்ந்து 2வது நாளாக டுவிட்டரில் நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது என்று நேற்று முன் தினம் தமிழக அரசு அறிவித்தது. மேலும் உளுந்தம் பருப்பே தான் வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று விளக்கமளித்திருந்தார்.

அரசின் இந்த அறிவிப்பிற்கு கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மொத்தத்தில் ரேஷன் கடைகளை முழுவதும் மூடவே பிளான் போடுகிறார்கள் என்று சாடுகிறார்கள் பலர். டுவிட்டரில் வலம் வரும் சில கருத்துகளின் தொகுப்பு இதோ.

இலவச மிக்சி வேலை செய்யலைன்ன புரிஞ்சுடுச்சா

இனி ரேசன் கடைகளில் உளுந்து கிடைக்காது - தமிழக அரசு. நீங்கள் கொடுத்த மிக்ஸி கிரைண்டர் ஓடுவதில்லை என்று இப்பவாச்சும் புரிந்ததே மகிழ்ச்சி என்று கிண்டலடித்துள்ளார் இவர்.

உங்களுக்கு எதுப்பு பொறுப்பு?

தமிழர்களின் பாரம்பரிய காலை பலகாரம் இட்லி. அதற்கு பிரதான மூலப் பொருள் உளுந்து.அந்த பருப்பு இல்லை. அப்பறம் உங்களுக்கு எதுக்கு பொறுப்பு என்று கேட்டுள்ளார் இவர்.

உளுங்து கொடுங்கப்பா

வங்கிகள் ஆரோக்யமா இருக்க அரசு பணம் கொடுத்துகிட்டே இருக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். மாவு அரைக்கனும் உளுந்து கொடுங்க என்று இட்லி சோக ஸ்மைலி போட்டுள்ளார் இந்த வலைபதிவர்.

என்ன சென்ட்ரல் கவர்மெண்ட்?

ஹோட்டல்ல சாப்டலாம்னு பார்த்தா ஜி.எஸ்.டி போடுறாங்க, வீட்ல சாப்டலாம்னா ரேஷன்ல உளுந்து போட மாட்றாங்க. என்ன ஸ்டேட் கவர்மெண்ட்? என்ன சென்ட்ரல் கவர்மெண்ட்? என்று நொந்துள்ளார் இவர்.

English summary
Netizens trolling the tamilnadu government's announcement that there is no supply of Urid dhal at ration shops continuing the second day memes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X