For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படத்துல இருக்க நல்ல வசனங்களை நீக்கிட்டா எப்படி ?

மெர்சல் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மெர்சல் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்னும் 2 நாட்களில் அந்த காட்சிகளை நீக்க பாஜக கெடு விதித்தது. இதைத்தொடர்ந்து மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்ட சில காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எதிர்ப்பும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..

ஒரு நாள் ஓங்கும்

உண்மை அழிக்க நெனச்சா இரண்டா வருவான்....எங்கள் கையும் ஒரு நாள் ஓங்கும்....என்கிறது இந்த டிவிட்

வைக்காமலே இருந்திருக்கலாம்

அட பாவிகளா இப்படியுமா பன்னனும் #மெர்சல் இதுக்கு வைக்காமலே இருந்துருக்கலாம்... என்கிறார் இந்த நெட்டிசன்

பின்வாங்குவது ஏற்புடையதல்ல..

படத்துல இருக்க நல்ல வசனங்களை நீக்கிட்டா எப்படி ?? பின்வாங்கும் செயல் ஏற்புடையதல்ல! என கூறுகிறார் இந்த வலைஞர்

அந்த பயம் இருக்கனும்

#மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புதல். அந்த பயம் இருக்கனும்டா.. என்கிறது இந்த டிவிட்

பெருமிதங்கள் பொங்கி வழிகிறது

எட்டுத்திக்கும் எரிச்சலடையும் காவிக்கூட்டத்தைப் பார்க்கையில் ஒரு தளபதி ரசிகனாக பெருமிதங்கள் பொங்கி வழிகிறது... என்கிறார் இந்த நெட்டிசன்

தமிழிசைக்கும் சொல்லிடுங்க

#மெர்சல் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி- நடிகர் விஜய்

அப்படியே தமிழிசைக்கும் நன்றின்னு சொல்லிடுங்க.. என்கிறார் இந்த வலைஞர்..

English summary
Netizens welcoming and opposing for removing the scenes from the movie mersal against govt. The Mersal movie producer announced that the controversy scenes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X