For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னைL: தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று தான் பலரது வீடுகளில் மீன்,கோழி, ஆட்டுக்கறி, இறால் வகைகள் என்டரியாகி உள்ளது. வியாழக்கிழமையுடன் புரட்டாசி முடிந்த நிலையில், இன்று ஐப்பசியின் முதல் ஞாயிறு என்பதால் தமிழகம் முழுவதும் இறைச்சி வியாபாரம் களை கட்டியுள்ளது.

பொதுவாகவே பலருக்கும் அசைவ உணவுகள் ரொம்பவே பிடிக்கும். இதில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதாலும், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் பலரும் அந்த நாட்களில் அசைவம் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

இதேபோல் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்ற காரணத்தால் அந்தமாதம் முழுவதுமே அசைவ உணவுகளை யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால் அந்த ஒரு மாதம் இறைச்சி வியாபாரம் மொத்தமாக சரிந்துவிடும்.

என்ன சார்.. இப்படி கிளம்பிட்டீங்க.. சொல்லவே இல்லை.. சபாஷ் போட்டு பாராட்டுங்கய்யா!என்ன சார்.. இப்படி கிளம்பிட்டீங்க.. சொல்லவே இல்லை.. சபாஷ் போட்டு பாராட்டுங்கய்யா!

கறிக்கடைகளில் கூட்டம்

கறிக்கடைகளில் கூட்டம்

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக புரட்டாசியை முன்னிட்டு யாரு அசைவ உணவு பக்கம் செல்லவில்லை. ஐப்பசி கடந்த வெள்ளிக்கிழமை பிறந்த நிலையில் இன்று ஐப்பசியின் முதல் ஞாயிறு என்பதால் பலரது வீடுகளில் மீன்,கோழி, ஆட்டுக்கறி, இறால் ஆகியவை என்ட்ரியாகி உள்ளது. இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.

மீன் விலை அதிகரிப்பு

மீன் விலை அதிகரிப்பு

புரட்டாசி மாதத்தில் 580 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒருகிலோ ஆட்டுக்கறி தற்போது 100 ரூபாய் அதிகரித்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கறிக்கோழி 200 ரூபாய்க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. சிந்தாதிரி பேட்டை மீன் சந்தையை பொறுத்தவரை கடந்த மாதம் 400 ரூபாய்க்கு விலை போன வஞ்சிரம் மற்றும் கொடுவா மீன்கள் 500 ரூபாய்க்கும், சங்கரா 200 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

போச்சம்பள்ளி சந்தை

போச்சம்பள்ளி சந்தை

புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோக இருந்தது. ஒரு ஆட்டிற்கு சராசரியாக ரூ.500 வரை கூடுதல் விலை இப்போது கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல ஆட்டு வியாபாரிகள் வாங்கி கொண்டு சென்றனர்.

வீடுகளில் என்ட்ரி

வீடுகளில் என்ட்ரி

தமிழகத்தில் பலரும் ஒரு மாதத்திற்கு ஆட்டு கறி, கோழி கறி, மீன், முட்டை, இறால் என அசைவ விருந்தை இன்றுதான் சாப்பிடுகிறார்கள். இதனால் ஆனந்த கண்ணீருடன் பலரும் மீம்ஸ்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

English summary
first sunday of aippasi month: non veg entry in houses after over purattasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X