For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. பெரிய பணக்கார வீட்டு பொண்ணா இருக்கும் போலயே.. அட வெங்காயம்!

வெங்காய விலை குறித்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    வெங்காயம் வாங்க கையேந்தும் நிலை வந்தாச்சு - வைரல் வீடியோ

    சென்னை: "வெங்காயம்".. பெரியார் சொன்ன வெங்காயத்தை விட இன்று மார்க்கெட்டில் விற்கும் வெங்காயம் படு காஸ்ட்லியாக மாறி விட்டது. அதை வைத்துத்தான் எத்தனை எத்தனை மீம்ஸ்!?

    எங்கு பார்த்தாலும் வெங்காய புராணம்தான். வெங்காயத்தின் விலையை கேட்டு உரிக்காமலேயே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது ஊரு ஜனம்... அப்படி ஒரு விலை உயர்வு.

    வெங்காய விலை உயர்வு என்பது அவ்வப்போது வருவதுதான். கடந்த ஆட்சியிலும் வந்தது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் வந்தது. இப்போதும் வந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ சாட்சாத் மக்கள்தானே. இந்த வெங்காய விலை உயர்வை வைத்து வலம் வரும் மீம்ஸ்களை ஒரு ரவுண்டு பார்ப்போம்.

    விர்றுன்னு ஏறுது விலை.. அலறி அடித்து ஓட வைக்கும் வெங்காயம்.. கிலோ ரூ.200ஐ தொட்டு அதிரடி! விர்றுன்னு ஏறுது விலை.. அலறி அடித்து ஓட வைக்கும் வெங்காயம்.. கிலோ ரூ.200ஐ தொட்டு அதிரடி!

    ரொம்ப கஷ்டம்

    "டெல்லியில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 120க்கு வாங்கினேன். 3 பேர் கொண்ட எங்கள் வீட்டிற்கு ஒரு கிலோ தான். 2 பேர் சம்பாதிக்கிறோம். ஆனாலும் இந்த விலை கடினமாக தான் இருக்கிறது. ஒருவர் சம்பாதித்து 5 பேருக்கு மேல் இருக்க கூடிய குடும்பங்களை நிலைமை! அரசுகளே எதையாவது செய்யுங்கள்" என்று கோரியுள்ளார் இவர்.

    பணக்கார குடும்பம்

    "பரவாயில்லை ப்ரோ வெங்காயம் வாங்கிற அளவிற்கு உங்க குடும்பம் பணக்கார குழுமத்தில் இணைந்து விட்டது. வாழ்த்துக்கள்" என்று இவர் கிண்டலடித்துள்ளார்.

    இது மேடவாக்கம் வெங்காயம்

    "மேடவாக்கத்தில் இன்று காலை கிலோ வெங்காயம் ரூ. 127" என்று இவர் பதிவிட்டுள்ளார்.

    திருடர்களிடமிருந்து காக்க

    கர்நாடக மாநிலம் காடக் மாவட்டத்தில் வெங்காயத்தை திருடர்கள் திருடி விடாமல் தடுக்க இரவுக் காவல் புரிந்து வருகின்றனராம்.

    காசுக்கு பதில் வெங்காயம்

    கரன்சிக்கு பதில் வெங்காயத்தையே பணமாக மாற்றி விட்டது இந்த விலை நிலவரம்.

    பணக்காரர் போல

    பணக்காரர் போல

    இதுதான் அல்ட்டிமேட்... இந்த பெண்ணின் காதை பாருங்க. தொங்கட்டானுக்கு பதில் வெங்காயத்தையே தொங்க விட்டுள்ளார். சொல்ல முடியாது.. நடந்தாலும் நடக்கும். யார் கண்டா!

    English summary
    onion price touch to rs 200 in tamilnadu and viral memes about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X