For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகரே அழகுதான் அதிலும் வைகையில் இறங்கும்போது கள்ளழகர் பேரழகு.. குதூகலத்தில் மதுரை மக்கள்!

சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை மதுரை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..வீடியோ

    மதுரை: சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை மதுரை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, மதுரை வைகை ஆற்றில் அழகர் பச்சை பட்டு உடுத்தி இன்று இறங்கினார். தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி, அசைந்து வந்த கள்ளழகர் பக்தர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.

    இதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    கள்ளழகர் பேரழகு

    அழகரே அழகுதான், அதிலும் வைகையில் இறங்கும்போது கள்ளழகர் பேரழகு

    மக்கள் வெள்ளம்

    வைகை வெள்ளத்தோடு மக்கள் வெள்ளத்தில் வந்து இறங்கினார் கள்ளழகர்

    அதிர்ந்தது வையகம்

    விடிய விடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. களை கட்டிய சித்திரை திருவிழா..கோவிந்தா கோஷத்தால் அதிர்ந்தது வையகம்..திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளம்

    கொண்டாடும் மதுரை

    சாதி மதம் கடந்த...
    சைவ வைணவ மக்கள் ஒன்றாய் கலந்து கொண்டாடும் மதுரை சித்திரை திருவிழா... சும்மாவா சொன்னாய்ங்க #அழகன் னு எங்கள் கள்ளழகர் பேரழகு தான்

    பக்தர் குரல் அதிர

    பச்சை பட்டு ஜொலிக்க... பக்தர் குரல் அதிர... வைகையில் இறங்கிய கள்ளழகர்!

    சங்கடம் தீர்க்கபோறாரு

    வாராரு வாராரு அழகர் வாராரு
    சப்பரம் ஏறிவாராரு நம்ம சங்கடம் தீர்க்கபோறாரு
    பச்சை பட்டு ஆடை உடுத்தி மக்களுக்கு காட்சி அளித்தார்

    மரியாதை சேர்க்கும் அழகர்

    #மதுரைக்கு அழகு சேர்க்கும் அழகர்...
    #பக்தருக்கு மரியாதை சேர்க்கும் அழகர்...
    #வைகைக்கு மகத்துவம் தரும் அழகர்...
    #மனதிற்கு இதம் தரும் அழகர்...
    #தேசத்திற்கு நன்மை தரும் அழகர்...
    #சனாதன தர்மத்திற்கு பெருமை சேர்க்கும் அழகர்....

    English summary
    Madurai Chithirai Festival is the most famous festival in the world. People of Madurai celebrate with the enthusiasm of the Kallazhagar Vaigai River as the peak of the festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X