For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே.. நாகேஷ் கூட ஆர்வம் காட்டுகிறாரே.. பொங்கல் பரிசு வாங்க.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

இணையத்தில் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசினை வைத்து மீம்ஸ்கள் உலா வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக சட்டசபை கூடியது... ஆளுநர் உரை- வீடியோ

    சென்னை: 'திருவிளையாடல்' படத்தில் வரும் நாகேஷ்கூட ரேஷனில் 1000 ரூபாய் வாங்க ஆர்வம் காட்டுகிறார். எங்கு தெரியுமா? இணையத்தில்தான்!!

    அரசு தரும் ஆயிரம் ரூபாயை வாங்க 3 நாட்களாக மக்கள் படாத பாடு பட்டு வருவதை வைத்து வெளியான மீம்ஸ்கள்தான் இப்போது இணையத்தை கலக்க ஆரம்பித்துள்ளன.

    பொங்கல் பரிசாக தமிழக அரசு 1000 ரூபாய் அறிவித்தது. இதை அறிவித்ததில் இருந்தே தமிழகம் முழுக்க ரேஷன் கடைகளில் ரணகளம்தான். கூட்ட நெரிசலில் முட்டி, மோதி, பலர் படுகாயமடைந்ததுடன், இதில் மரணங்களும் நிகழ்ந்தது அதிர்ச்சியானதே.

    மீம்ஸ்கள்

    மீம்ஸ்கள்

    இந்த பணத்தை பெறுவதற்காக மக்கள் விடிகாலையிலேயே வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலும் பெண்கள்தான் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இணையதளங்களில் அரசை கலாய்த்து பல மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். நிறைய மீம்ஸ்கள் வழக்கம்போல் வடிவேலுவுடன்தான் நடமாடுகிறது.

    ஃபாரின் ரிட்டன்

    "ஐ ஆம் பாலாஜி.. ஐ டோன்ட் நோ தமிழ், பேரன்ட்ஸ் சென்டிங் மீ கலெக்ட்டிங் 1000 ருபீஸ் (Am Balajee from this Street, I dont know tamil, Parents sending me collecting 1000 rs...) என்று ஃபாரீன் ரிட்டன் வடிவேலு பேசும் டயலாக் வைரலாகிறது.

    சர்க்கார் வசனம்

    அதேபோல, இலவசத்தை எதிர்த்து பெரும் பரபரபையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய சர்க்கார் பட வசனமா "வறுமை போயிட்டா ஓட்டுக்கு காசு வாங்குவானா...?" என்று விஜய்யை பார்த்தும் கேள்வியுடன் மற்றொரு ட்வீட் தெறிக்கிறது.

    ஆயிரம் ரூபாய்

    இன்றைக்கு பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே பேட்ட, மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த படங்களை ஆயிரம் ரூபாய் விவகாரத்துடன் இணைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

    தருமிகூட ஆர்வம்

    மேலும் அந்த கால திருவிளையாடல் படத்தில் வரும் நாகேஷ் கதாபாத்திரம் தருமிகூட, எடப்பாடி பழனிசாமி அரசு தரும் இந்த 1000 ரூபாயை வாங்க ஆர்வம் காட்டுவதாக மற்றொரு மீம்ஸ் உள்ளது.

    கேலி, கிண்டல்கள்

    கேலி, கிண்டல்கள்

    எது எப்படியோ, உண்மையிலேயே மக்களுக்கான மகிழ்ச்சிகரமான திட்டமாக இந்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு இருந்தாலும்கூட இணையத்தில் கிண்டல், கேலிகளை பரப்பிவிடும் நிலைமைக்கு ஆகிவிட்டது எதனாலோ தெரியவில்லை.

    English summary
    Memes Viral in Social Media about Pongal Prize 1000 Rupees by TN Govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X