For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் மாதம்னாலே உங்களுக்கு கிறுக்கு புடிச்சிடுமா?.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!

விஷாலின் வேட்புமனு முதலில் ரத்து செய்யப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த விஷாலின் வேட்புமனு முதலில் ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது.

    அப்போது விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் விஷால் தேர்தல் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது.

    பின்னர் விஷால் அந்த இடத்திலிருந்து கிளம்பியதும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

    இவ்வளவு பிரச்சினை வரும்

    நல்லது செய்தால் இவ்வளவு பிரச்சனை வரும் என தெரியாது #விஷால்

    தமிழ் ராக்கர்ஸ் : நீ ஒரு தொகுதி மக்களுக்கு நல்லது பண்ண இவ்வளவு கஷடபடுற நான் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் நல்லது பண்ண நினைச்சு படத்தோ ரீலிஸ் பன்றேன் எனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் விஷால் தம்பி...

    ஒரு யுகமே தேவை

    வேட்பு மனு தாக்கல் செய்ய ரெண்டு மணி நேரம் போதும்
    வேட்பு மனு நிராகரிக்க ரெண்டு நிமிசம் போதும்
    ஆனா
    மக்கள்கிட்ட ஓட்டு வாங்க ஒரு யுகமே தேவைப்படும்
    #விஷால்

    சின்ன பசங்க வந்தா இப்படிதான்

    Signature லாம் கரெக்ட்டா தான் இருக்கும். ஆனா இதான் அரசியல். பெரியவங்க விளாடுர இடத்துல சின்ன பசங்க வந்தா இப்டித்தான் #விஷால் #Vishal

    முன்மொழிந்தவர்களையும்...

    கூவத்தூர்ல MLAக்களை அடைச்சு வெச்ச மாதிரி, மனுதாக்கல் ஏற்கப்படும் வரை முன்மொழிந்தவர்களையும் இனிமே அடைச்சு வைக்கணும் போல.

    தொங்கல்லா இருக்காங்க...

    #விஷால் எலக்சன்ல வரவே கூடாதுன்னு பயப்படுறாங்கன்னா எதிரிங்க ரொம்ப தொங்கல்லா இருக்காங்கன்னு அர்த்தம்

    #ஆர்கேநகர் மக்கள் உஷார்..

    ஒரு நாளாக இருந்தாலும்...

    ஒரு நாளாக இருந்தாலும் மனுஷன் பூரா மீடியாவயும் இன்னிக்கு பூரா தன் கண்ட்ரோல்ல கொண்டு வந்துட்டாப்டி..

    ஜெயலலிதா மறைவு

    இப்படிதான் போன வருஷம் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தம்மா செத்து போயிட்டாங்கன்னு சொல்லி அப்புறம் இல்லைனு சொன்னானுங்க. ஏன்டா டிசம்பர் மாதம் வந்தாலே உங்களுக்கு கிறுக்கு புடிச்சிடுமா.

    ராணுவத்தில் சேரமாட்டீங்களா?

    மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இதுதான் கதியா?! - விஷால் வேதனை

    அரசியலுக்கேதான் வரணுமா? ஏன் இந்த இராணுவத்தில எல்லாம் சேரமாட்டிங்களா?!

    English summary
    Netisans shared their views in Twitter in the issue of Vishal's nomination rejected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X