For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிக்கு போகாதீங்க… சொன்னது சுப்ரமணிய சுவாமி… பட்டினி கிடங்க… பதிலடி கொடுத்த வலைஞர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தி படிக்க பிடிக்காதவங்க பள்ளிக்கூடம் போகாதீங்க என்று ட்விட்டரில் பதிவிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி.

சமூக வலைத்தளங்களில் எதையாவது கருத்து கூறி சர்ச்சை கிளப்புவது சுப்ரமணிய சுவாமிக்கு வாடிக்கையான ஒன்று. இப்போதும் அப்படித்தான் இந்தி படிப்பது பற்றி ஒன்றை சொல்லப்போய் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் வலைஞர்கள். இது இப்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பள்ளிக்கு போகாதீங்க

"பள்ளிக்கூடங்களில் இந்தித் திணிப்புத் தவறானது" என்று ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்குப் பதிலளித்த சுவாமி, "இந்தித் திணிப்பு பிடிக்காதவர்களுக்கு ஒரு மாற்றுவழி உள்ளது; அதுதான் பள்ளிக்கே செல்லாமல் இருப்பது" என்று கருத்திட்டிருந்தார்.

பட்டினி கிடங்க

இதைக்கண்ட மற்றொரு பதிவர், "சரி! நாளை முதல் நாடெங்கும் அசைவம் மட்டுமே வழங்கப்பெறும். பிடிக்காதவர்களுக்கு மாற்றுவழி ஒன்றுள்ளது; அதுதான் பட்டினி கிடப்பது." என்று பதில் கொடுத்துள்ளார்.

எல்லாம் சமம்

இந்தியாவில் எல்லா மொழிகளும் சமம்தான். இதில் இந்திக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர் வலைஞர்கள். இதைத் தொடர்ந்து ‘மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர் வலைஞர்கள்.

வம்பில் மாட்டுவது

வம்பில் மாட்டுவது

சுப்ரமணிய சுவாமி வலிய போய் வம்பில் மாட்டிக்கொள்வது இது முதல்முறையல்ல இதுபோல் பலமுறை எதையாவது கருத்து சொல்லி அதற்கு பதிலடி வாங்கி கட்டிக்கொண்டுள்ளார். இன்னொரு எமர்ஜென்சி என்றும் பதிவிட்டு வருகின்றனர் வலைஞர்கள்.

English summary
Twitters attack Subramania Swamy we'll tell vegetarians thay only meat is available from tomorrow but it's not imposing because you've an option to stay hungry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X