For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை டாஸ்மாக் திறப்பு.. சரக்கு வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு.. தெறிக்கும் மீம்ஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மதுக்கடைகள் சென்னை மற்றும் அதனை ஒட்டிள்ளள பகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் நாளை திறக்கப்பட உள்ளது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விமர்சித்து மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

Recommended Video

    டாஸ்மாக் கடைகளை திறக்க தயாரான தமிழகம்

    இந்நிலையில் இன்று டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

    50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்- காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரையிலும், 40 -50 வயதுக்குள் உள்ளவர்கள் ஒரு மணி முதல் 3 மணி வரையிலும் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு வரிசை

    பாதுகாப்பு வரிசை

    ஒவ்வொரு மதுக்கடை முன்பும் அந்த பகுதியில் உள்ள போலீசார் இரண்டு பேர் தடுப்புகள் அமைத்து கூட்டம் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இரண்டு தனி வரிசைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர சுத்தம் பேணுதல், முககவசம் அணிதல உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுக்கடையில் மதுவாங்க நேரம் ஒதுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. சிலர் நகைச்சுவையாகவும், சிலர் மிகவும் கோபத்துடனும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

    பிற்பகலில் பல்ராம் நாயுடு

    பிற்பகலில் பல்ராம் நாயுடு

    நெட்டிசன் ஒருவர் மது வாங்க காலையில் கமலின் இந்தியன் தாத்தா வேடத்திலும், பிற்பகலில் அதே கமலின் பல்ராம் நாயுடு வேடத்திலும், மாலையில் அதே கமலின் இளம் வயது வேடத்திலும் சென்று மதுவாங்கலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வாழை மரம் தோரணம்

    வாழை மரம் தோரணம்

    இன்னொரு நெட்டிசன் கோவையில் உள்ள டாஸ்மாக் குறித்து பதிவிட்டுள்ளார். கோவை தொண்டாமுத்தூரில் உள்ள டாஸ்மாக் ஒன்று நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி வாழை மரம் மற்றும் தோரணம் காட்டி புதிதாக கட்டிட திறப்பு நடப்பது போல் பலபலவென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    படுக்கையுடன் வருவார்கள்

    படுக்கையுடன் வருவார்கள்

    இன்னொரு நெட்டிசன் நாளை 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட உள்ள நிலையில் அதிக அளவிலான குடிமகன்கள் கூடுவார்கள் என்பதை விமர்சித்து மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 6ம் தேதி இரவே குடிமகன் பாய் மற்றும் தலையணையுடன் சென்று டாஸ்மாக் கடை முன்பு சமூக இடைவெளி விட்டு படுத்தே வரிசை போட்டு இடம் பிடிப்பார்கள் என்று உள்ளது.

    குடிமகன்கள் குஷி

    டாஸ்மாக் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் அதுபற்றி இன்னொருவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.. அதில் குடிமகன்கள் நாளை முதல் எவ்வளவு உற்சாகமாக குடித்துவிட்டு நடனம் ஆடுவார்கள். எவ்வளவு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதாக அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் உள்ளன. குடிமகன்கள் நாளை டாஸ்மாக்கில் உற்சாகமாக இருப்பார்கள் என்பதாக வீடியோ உள்ளது-

     பத்திரமா எடுத்துட்டு வா

    பத்திரமா எடுத்துட்டு வா

    இன்னொருவர் இந்தா.. நாளைக்கு ஃபர்ஸ்ட் பேட்ச் உனக்குதானாம்! நாலு பீர், ரெண்டு ஃபுல் எங்க செட்டுக்கு தனியா வாங்கி பத்திரமா எடுத்துட்டு வா. என்று தந்தையை பார்த்து சொல்வது போல் 7ஜி ரெயின் போ காலனி பட காட்சியைவைத்து பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

    English summary
    tomorrow tasmac shops open in tamilnadu and tamac time reased memes viral on social media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X