For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்

நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலையில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த மீம்ஸ்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு, 7 பேர் விடுதலை ஆகியவற்றை நிஜமாகவே எதிர்ப்பது ஆதரிப்பது யார்?

    சென்னை: நீட் தேர்வை நிஜமாகவே எதிர்ப்பது ஆதரிப்பது யார்? 7 பேர் விடுதலையை நிஜமாவே ஆதரிப்பது எதிர்ப்பது யார்?
    இந்த தமிழக கட்சிகள் எல்லாம் முரண்பட்ட கூட்டணியை ஆளுக்கு ஒரு பக்கம் அமைத்து கொண்டுள்ளனர். வெறும் தேர்தலுக்கான கூட்டணிதான் இப்போது அமைந்துள்ளது என்று சொல்வதா? அல்லது தமிழக மக்கள் தலையில் எல்லாருமே சேர்ந்து மொளகாய் அரைத்து வருகிறார்களே என்றே தெரியவில்லை!

    இணையதளத்தில் சில மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. டி-20 நடப்பதாலோ என்னவோ தெரியவில்லை. தோனியை மையமாக வைத்து இந்த மீம்ஸ்கள் வருகின்றன. மையம் என்றால் மத்திய அரசு என்றுகூட எடுத்து கொள்ளலாம்.

    நீட் தேர்வு

    ஒரு மீம்ஸ்: மத்திய அரசாக சித்தரித்துள்ள கேப்டன் தோனி நடுவில் நின்று கொண்டிருக்கிறார். ஒரே கூட்டணியில் உள்ள பாஜகவும், அதிமுகவும் தோனியின் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கேள்வி எழுப்புகிறார்கள். "கொய்யால அவன் நீட் தேர்வை ரத்து செய்ய உன்கிட்ட வலியுறுத்துவோம்றான், நீ முடியாதுன்ற... ரெண்டு பேறும் சேர்ந்து என்னடா பித்தலாட்டம் பன்றீங்க?" என்கிறது அந்த பதிவு.

    7 பேர் விடுதலை

    மற்றொரு மீம்ஸ்: மத்திய அரசாக சித்தரித்துள்ள கேப்டன் தோனி நடுவில் நின்று கொண்டிருக்கிறார். பக்கா எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக தோனியின் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கேள்வி எழுப்புகிறார்கள். "கொய்யால அவன் 7 பேரை விடுதலை பன்னனும்னு சொல்றான், நீ முடியாதுன்ற. ரெண்டு பேறும் சேர்ந்து என்னடா பித்தலாட்டம் பன்றீங்க...." என்கிறது அந்த பதிவு.

     அரசியல் லாபம்

    அரசியல் லாபம்

    இப்படி தமிழக பிரச்சனையை மையப்படுத்தி பல மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. யார் யாரோடு கூட்டணி வைத்து கொண்டாலும் பிரச்சனைகள் மட்டும் அப்படியேதான் இருக்கின்றன என்றும், அரசியல் லாபத்துக்காக யாருமே மக்களை கண்டுகொள்ளவில்லை என்பதும்தான் இதன் அர்த்தம்.

     மறைமுக கூட்டு

    மறைமுக கூட்டு

    இதையெல்லாம் பார்த்தால், சீமான் சொல்றதுதான் ஞாபகத்துக்கு வந்து போகிறது. "காங்கிரஸ் ஒரு திட்டம் கொண்டுவந்தால் திமுக அதை ஆதரிப்பாங்க.. திமுக ஆதரிக்கிறது பாஜக செயல்படுத்துவாங்க. ஆக மொத்தம் இவங்க எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் மறைமுக கூட்டு" என்றார்!

    English summary
    Viral Memes about DMK, Congress, BJPs stand in NEET and 7 Tamilians release case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X