For Daily Alerts
“கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது”.. கடைசில நெட்டிசன்கள இப்டி ஒரு முடிவை எடுக்க வச்சிட்டீங்களேய்யா.!
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இப்படியான பரபரப்பான சூழலுக்கு இடையில், இரண்டு பிரபலங்களின் சினிமா எண்ட்ரி பற்றிய நியூஸ் இணையத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
அதில் முதலாவது நபர் லெஜண்ட் சரவணன். இரண்டாவது நபர் ஹரி நாடார். ஏற்கனவே இவர்கள் இருவருமே இணையத்தில் பிரபலமானவர்கள் தான். ஆனாலும் அவர்களது அதிரடியான சினிமா எண்ட்ரி தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
'நீ வேற இடைல இடைல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..' என்ற ரேஞ்சுக்கு இவர்களைப் பற்றி இணையத்தில் மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...











