For Quick Alerts
For Daily Alerts
ஏண்டா டேய் பகல்ல பக்கத்துலயே வரமாட்ட.. தூங்கும்போது மட்டும் ஏன் டிஸ்டர்ப் பண்ற?
சென்னை: கொரோனா மாதிரியே உலக மக்களை பல நீண்டகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் கொசுத் தொல்லை. கொசுவால் பல புதுப்புது பிரச்சினைகள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டாலும், கொசுவை ஒழிக்க முடியாமல் இன்னமும் மனிதன் திணறி வருகிறான் என்பது தான் உண்மை.
எப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவோடு வாழப் பழகி வருகிறோமோ, அதேபோல் பல ஆண்டுகளாகவே நம்மையும் அறியாமல் கொசுவோடு வாழப் பழகி விட்டோம்.
இப்படியாய் நம்மைப் பாடாய் படுத்தும் கொசுவிற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி உலக கொசு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மகளிர் தினம், காதலர் தினம் போல இந்த கொசு தினத்தையும் நெட்டிசன்கள் ஜாலியாய் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதோ நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...







