For Daily Alerts
Just In
2021.. இதுவரை நீ பண்ணினது எல்லாம் போதும்.. போகும்போது ஒரு காட்டு காட்டிட்டு போய்டாத!
சென்னை: 2021ம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் பலருக்கும் இந்த ஆண்டு கசப்பானதாகவே அமைந்து விட்டது. இதை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

2020 தான் மோசமானதான இருந்தது, 2021 நிச்சயம் நல்ல மாற்றத்தை தரும் என மக்கள் நினத்தனர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி இந்தாண்டும் கொரோனா இரண்டாம் அலையால் நாடு ரொம்பவே பாடுபட்டு விட்டது. 2020ம் சரி, 2021ம் சரி எப்படி கடந்ததே எனத் தெரியாமல் முடிந்து விட்டது.

'விஜய் சேதுபதிக்காவது நடுவுல கொஞ்சம் பக்கத்தைத் தான் காணோம்.. ஆனா நமக்கோ நடுவில் இரண்டு வருடங்களையே காணோம்..' என இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes collection on new year and year ender 2021.