For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவியாகி பயமுறுத்தாதே!

அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையை தெர்மாகோல் வைத்து மூடியது பற்றி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மகோல் வைத்து அடைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் அனைத்தும் கரை ஒதுங்கிவிட்டு அமைச்சருக்கே ஷாக் கொடுத்தன. இதை வைத்து பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டலாய் பதிவிட்டு வருகின்றனர்.

என்னடா இந்த பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று அமைச்சரும், இரு மாவட்ட ஆட்சியர்களும் யோசிக்க, பணால் ஆன திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் செலவாயிருச்சே அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசித்து ரப்பர் பந்து போட்டு மூட முடிவு செய்துள்ளனர்.

தெர்மாகோல் போட்டு மூடிய திட்டத்தை வைத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்

ஆவியாகாதே?

ஏண்டா பொணத்து மேல தெர்மோகோல வச்சி மூடுறீங்க...?நாளைக்கு 'ஆவி'யாகி நம்மள பயமுறுத்தாமா இருக்கத்தான்...?

செல்லூர் ராஜூ நதிநீர் இணைப்பு

செல்லூர் ராஜூவை இதை விட யாராலும் கிண்டல் செய்ய முடியாது

தெர்மாகோல் ராஜூ

வைகை அணை நீரை தெர்மாக்கோல் கொண்டு மூடியதால் செல்லூர் ராஜூ ஆகிய நீங்கள் இன்று முதல் "தெர்மாகோல் ராஜூ" என்று அன்போடு அழைக்கப்படுவாய்..!! என்று இம்சை அரசன் பாணியில் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்

குடியாட்சி சாரே!

முல்லைக்கு தேர் கொடுத்தா அது முடியாட்சி... வைகைக்கு தெர்மோகோல் கொடுத்தா அது குடியாட்சி... தட்ஸ் ஆல்...!

அணையை அட்டை போட்டு மூடியது நாமதான்

தமிழ்நாட்டுலேயே ஏன் இந்தியாவுலே இல்லையில்லை உலகத்திலேயே அணையை தெர்மாகோல் அட்டைகள் மூலம் மூடிய அமைச்சர் நம்ம செல்லூர் ராஜூ.

வானத்தை மறைக்கும் திட்டம்

அடுத்து வெயிலின் தாக்கத்தை குறைக்க 100000கோடி செலவில் வானத்தை தார் பாய் விரித்து மறைக்கும் திட்டத்தை திரு.செல்லூர் ராஜூ அறிமுகம் செய்வார்

English summary
Using thermocoal to prevent the evaporation of Vaigai river twitterist comments What an idea sir ji??New plan to save water with covering on thermocol.expenses 10lakhs Super plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X