For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பரவினாலும் பரவியது.. ஐடி கம்பெனிகள் மட்டுமல்ல, பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் (WFH) அதாவது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை தங்கள் ஊழியர்களுக்கு கொடுத்து விட்டன.

தமிழகத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுபோன்ற வசதியை அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ஐடி ஊழியர்கள் பரவாயில்லை. ஏற்கனவே அவ்வப்போது செய்த அனுபவம் இருக்கும்.

வேறு பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இதில் அனுபவமே கிடையாது. அவர்கள் முதல்முறையாக வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பிக்கும் போது என்ன மாதிரியான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என்பது பற்றி சில நகைச்சுவை மீம்ஸ்கள் சுற்றிவருகின்றன. பார்க்கலாம் வாருங்கள்:

WFH அலப்பறைகள்... திடீர்னு சொன்னா எப்டிடா.. கக்கூஸ் கதவை மூடு.. லேப்டாப்பை அங்க வைக்கலாம்! WFH அலப்பறைகள்... திடீர்னு சொன்னா எப்டிடா.. கக்கூஸ் கதவை மூடு.. லேப்டாப்பை அங்க வைக்கலாம்!

ஓடுங்க, ஓடுங்க

ஓடுங்க, ஓடுங்க

தலைவலி, காய்ச்சல் என்று வொர்க் பிரம் ஹோம் செய்யலாமா என்று கேட்டால், "வேண்டாம் ஆபீசுக்கு வந்து விடுங்கள்" என்று கறாராக சொன்ன கம்பெனிகள் கூட, இப்போது, இந்தாங்க லேப்டாப்.. இந்தாங்க நெட் கனெக்சன்.. எப்படியோ வேலை பார்த்தால் சரி.. என்று நாடோடிகள் படத்தில் வரும் ஹீரோ கதாபாத்திரம் போல அவசர அவசரமாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது என்பதை சொல்லி சிரிக்க வைக்கிறது இந்த மீம்ஸ்.

லுங்கி போதும்

லுங்கி போதும்

வொர்க் பிரம் ஹோம் செய்வதில், ஒரு வசதி இருக்கிறது. வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்பே, குளிக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது. துணி அயர்ன் செய்ய தேவை கிடையாது. அதனால் ஆபீஸ் போக ஆகும் பெட்ரோல் செலவோ, அயர்ன் பண்ண செலவிடும் தொகையோ என மாசத்துக்கு ஒரு கணிசமான அமவுண்ட்டை அவர்கள் மிச்சம்பிடித்துவிடலாம். அவ்வளவு ஏன் ஆண்களாக இருந்தால், ஒரு லுங்கி.. மேலே முண்டா பனியன். பெண்களாக இருந்தால் நைட்டி கூட போதும். பல் துலக்கி விட்டுதான் வேலை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சில நேரம் வேலை செய்துகொண்டே பல்துலக்க கூடும். இப்படியான கூத்துக்களும் அரங்கேறும் என்பதை சொல்கிறது இந்த மீம்ஸ்.

ஒர்க் பிரம் கிச்சன்

ஒர்க் பிரம் கிச்சன்

வொர்க் பிரம் ஹோம் என்றதும், ஸ்டைலாக சேர் மீது உட்கார்ந்து கொண்டு, மடிமீது லேப்டாப் வைத்துக்கொண்டு தட்டுவது என்று சிலர் கற்பனை செய்துகொண்டு வீட்டில் வேலையை ஆரம்பித்து இருப்பார்கள். ஆனால் மனைவி, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து வேறு பிளான் வைத்திருப்பார். என்னங்க.. கொஞ்சம் தலைவலியா இருக்கு.. கொஞ்சம் சமையல் வேலையை பார்த்துக்கோங்க.. அந்த குக்கர்ல எத்தன விசில் வருதுன்னு எண்ணுங்க.. என்று சொல்லக்கூடும். கடைசியில் கிச்சனில் இருந்தபடி தான் வேலை பார்க்கும் நிலைமைக்கு சில பாவப்பட்ட ஆண்கள் தள்ளப்பட்டு இருப்பார்கள் என்கிறது இந்த மீம்ஸ்.

அடிச்சி நொறுக்கு

அடிச்சி நொறுக்கு

ஆபீஸில் சில வரைமுறைகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடக்கூடாது என்று கறாராகச் சொல்லி இருப்பார் அட்மின் மேனேஜர். ஆனால், வீட்டில் அந்த பிரச்சினை கிடையாது. சுற்றிலும் 5 பிஸ்கட் பாக்கெட்டுகள், 4 சிப்ஸ் பாக்கெட்டுகள், கூல்ட்ரிங்ஸ் வைத்து குடித்தபடியே வேலை பார்க்க முடியும் என்கிறது இந்த மீம்ஸ்.

ஒரே வெயிலு

ஒரே வெயிலு

இது வெயில் காலம். ஆபீஸ் என்றால் ஏசி வசதி இருக்கும். வீட்டில் பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. அப்புறம் என்ன செய்ய, சட்டையை கழற்றி போட்டு ஹாயா உட்கார வேண்டியதுதான். யாருக்கு தெரியப்போகுது. யோகிபாபு இதில் உட்கார்ந்திருக்காரே அப்படி.

English summary
Many companies in India giving work from home option to its employees as coronavirus spreading, here is the some memes over this wfh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X