For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Mettur Dam Water Level Today | மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றம்.

    Newest First Oldest First
    9:41 AM, 21 Mar

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 77 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.42 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 25.75 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    11:11 AM, 18 Mar

    நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 148 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 610 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 158 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.05 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    10:10 AM, 13 Mar

    சேலம்: காவிரியில் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55 கனஅடியில் இருந்து 67 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. விரைவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
    10:47 AM, 12 Mar

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.49 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 26.578 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    11:32 AM, 11 Mar

    இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.62 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
    9:47 AM, 7 Nov

    மேட்டூர் அணையின் நீர் மட்டம் 53.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 20.28 டி.எம்.சி ஆக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,702 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    9:01 AM, 27 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தினசரி 1 அடி உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 18.50 டிஎம்சியாக உள்ளது.
    9:09 AM, 25 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தினசரி 2 அடி உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 17.50 டிஎம்சியாக உள்ளது.
    10:11 AM, 19 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 7355 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த 13 நாட்களில் 15 அடி உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு 15.16 டிஎம்சியாக உள்ளது.
    10:21 AM, 18 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த 12 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது.
    10:12 AM, 17 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.64 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 14.04 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 8 நாட்களில் 12 அடி உயர்ந்துள்ளது.
    9:51 AM, 16 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.40 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 1 வாரத்தில் 11 அடி உயர்ந்துள்ளது.
    9:25 AM, 14 Oct

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.60 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது.
    9:25 AM, 13 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.
    8:26 AM, 12 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 33.10 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 9345 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
    8:27 AM, 11 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 31.30 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.
    9:08 AM, 10 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 30.35 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 130 கனஅடியாக உள்ளது.
    9:32 AM, 9 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 31.30 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு200 கனஅடியாக உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    8:50 AM, 7 Oct

    மேட்டூர் அணை நீர்மட்டம் 32.85 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் தினசரியும் 1 அடி சரிவடைந்து வருகிறது.
    9:33 AM, 4 Oct

    மேட்டூர் அணையின் நீர் மட்டம் 34.42 அடியாக சரிவடைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 9.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1500 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    10:06 AM, 30 Sep

    மேட்டூர் அணையின் நீர் மட்டம் 37.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 10.83 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 4,524 கன அடியாக குறைந்துள்ளது.
    10:05 AM, 28 Sep

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.02 அடியில் இருந்து 38.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 11.131 டி.எம்.சி. ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,231 கனஅடியில் இருந்து 7,070 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    9:07 AM, 25 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 37.85 அடியாக நீடிக்கிறது. பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக நீடிக்கிறது.
    9:59 AM, 23 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 37.85 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் தினசரியும் 1 அடி சரிவடைந்து வருகிறது.
    9:34 AM, 22 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 38.75 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் தினசரியும் 1 அடி சரிவடைந்து வருகிறது.
    12:24 PM, 20 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 39.13 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. நீர் இருப்பு 11 டிஎம்சியாக உள்ளது.
    9:29 AM, 19 Sep

    சேலம்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
    9:28 AM, 19 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 39.75 அடியாக சரிவடைந்துள்ளது. பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் தினசரியும் 1 அடி சரிவடைந்து வருகிறது.
    9:55 AM, 18 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியாக சரிவடைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.
    3:50 PM, 15 Sep

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை வரலாறு:

    சேலம்: காவிரியில் விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 55 கனஅடியில் இருந்து 67 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.67 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. விரைவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    எங்கு உள்ளது மேட்டூர் அணை?

    இது சேலம் மாவட்டத்தில் மேட்டூர் எனும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது.இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் மேட்டூர் அணை அழைக்கப்படுகிறது.

    எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது மேட்டூர் அணை?

    மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது.

    மேட்டூர் அணை முழு கொள்ளளவு விவரம்:

    இந்த அணையில் 93.4 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். மேட்டூர் அணையின் மொத்த உயரம் 124 அடியாகும். இந்த அணை 1700 மீட்டர் நீளம் கொண்டது. ஆனால் 120 உயரம் வரை மட்டுமே அணையில் தண்ணீரை சேமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை வானிலை:

    மேட்டூர் அணை மலையும் காடும் சார்ந்து காணப்படுவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிவருகிறது. குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் குளிர்ச்சியான காற்று வீசுவதால் வெயில் தெரிவதில்லை.

    மேட்டூர் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

    சேலம் நகரத்திலிருநத்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டூரில் உள்ளது.இதன் எதிரில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் வகையில் பூங்காவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கிழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழே குறையும்பபோது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும். ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் ஆகியவை மேட்டூர் அணைக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

    மேட்டூர் அணை - பார்வையிடும் நேரம்:

    மேட்டூர் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 5 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

    Dam Water Level Today
    English summary
    Mettur Dam Water Level Today: Check complete details on Mettur Dam Water Level, History, Total Capacity, Weather, Visit Timings, Nearby Places to Visit and much more interesting facts on Mettur Dam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X