For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எது குறுக்கிட்டாலும்.. நேர்மையாக இருங்கள்.. நிச்சயம் வெல்வீர்கள்

Google Oneindia Tamil News

மகாத்மா காந்தியின் பொன் மொழி ஒன்றை இப்போது நாம் பார்க்கலாம். "வரலாற்றில் நாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாருங்கள். எப்போதுமே அன்பும், அகிம்சையும்தான் நமக்கு வெற்றி கொடுத்திருக்கும். சர்வாதிகாரிகளை நாம் பார்த்திருக்கலாம்..

கொலைகாரர்களைப் பார்த்திருக்கலாம்.. இவர்கள் எல்லாம் எப்போதும் நம்முடன் ஏதவது ஒரு ரூபத்தில் இருப்பவர்கள்தான். ஆனால் கடைசியில் அவர்கள் வீழ்வார்கள். நேர்மைதான் வெல்லும்.. இதை எப்போதும் மனதில் நிறுத்தி வையுங்கள்".

எவ்வளவு உண்மையான வார்த்தை பாருங்கள். நிறையப் பேருக்கு இந்த ஞானம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. மகாத்மாக்களுக்கு மட்டுமல்ல இது எல்லோருக்குமே பொருந்தக் கூடிய வாழ்க்கை சூட்சுமம்தான்.

சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்

 நேர்மையுடன் இருந்தால் வெல்லலாம்

நேர்மையுடன் இருந்தால் வெல்லலாம்

நேர்மையாக இருக்கும் மனிதன் வாழ்க்கையில் வெற்றி அடைகிறான். கர்மவீரர் காமராஜர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினாலும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அவர் இறக்கும் போது அவர் சம்பாதித்தது மக்கள் சொத்து மட்டுமே. ஆனால் இன்றும் காமராஜரின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கூறப்படுகிறது. அதற்கு அவருடைய நேர்மையே காரணம்.

 இந்திரன் சந்திரன் கதை

இந்திரன் சந்திரன் கதை

ஒரு ஊரில் இந்திரன் சந்திரன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். இருவரும் ஊரில் அரிசி வியாபாரம் செய்து வந்தனர். இந்திரன் நேர்மையாகத் தன் வியாபாரத்தைச் செய்து வந்தான். ஆனால் சந்திரனோ அரிசியின் அளவைக் குறைத்து மக்களுக்குக் கொடுப்பான். அதே நேரம் அரிசியை அதிக விலைக்கு விற்று வந்தான். அதனால் குறுகிய காலத்திலேயே பெரும்பணக்காரனாகி விட்டான். இந்திரன் அரிசியைத் தரமாகவும் குறைந்த விலைக்கும் விற்று நேர்மையாக வாழ்ந்து வந்தான். இதனால் பலரும் இந்திரனின் நேர்மையைப் பாராட்டினர்.

 ராஜாவும் அரிசியும்

ராஜாவும் அரிசியும்

ஒரு நாள் சந்திரனின் கடையில் ராஜா என்பவன் அரிசி வாங்க வந்தான். அங்கு தரமற்ற அரிசியை அதிக விலைக்கு விற்பதைப் பார்த்தான். தானும் அந்த அரிசியை வாங்கிக் கொண்டு நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்தான். மறுநாள் அங்கு வந்த தரப்பரிசோதனை அதிகாரி அவன் அரிசிக் கடையைச் சோதனை ஒரு கிா அரிசிக்குப் பதிலாக முக்கால் கிலோ அரிசி கொடுத்து மக்களை அவன் ஏமாற்றுவதையும் அதிக விலையில் விற்பதையும் தன் ஆய்வில் கண்டறிந்தார். இதனால் கோபமடைந்த அவர் சந்திரனின் அரிசிக்கடையைச் சீல் வைத்தார். அதோடு வருமான வரிச் செலுத்தாதக் காரணத்தினால் சந்திரனின் சொத்துக்களும் முடக்கப்பட்டது. இந்திரன் நேர்மையாக இருந்ததால் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். சந்திரன் தன் குறுக்கு வழியால் அவனுடைய சொத்துக்கள் அனைத்தும் பறிபோயின. எனவே நேர்மையாக இருந்தால் வாழ்க்கை உங்கள் வசம் தான்.

 இன்னல்களை வெல்லுங்கள்

இன்னல்களை வெல்லுங்கள்

நேர்மையாக இருப்பவன் அனைவராலும் போற்றப்படுகிறான். அலுவலகத்தில் நேர்மையாகப் பணியாற்றுபவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அவருடைய நேர்மையே அவரை இறுதி வரைக் காப்பாற்றுகிறது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன் வண்டியில் பயணம் செய்த ஒருவர் பணப்பையை வைத்துச் சென்றுவிட்டார். அதை அவரைத் தேடிக கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்ததற்காக அவருடைய நேர்மைக்காக அரசாங்கமே அவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தது.

எப்பொழுதும் நேர்மையை உங்கள் வாழ்வில் கடைப்பிடியுங்கள். அது நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் வெற்றியடைய வழி வகுக்கும்.

English summary
You can win always if you are honest in everything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X