For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சிறந்த தானம்.. குருதிக் கொடையளிப்போம்.. உயிர் காப்போம்!

Google Oneindia Tamil News

இரத்த தானம் மனிதனின் உயிர் காக்கும் சிறந்த தானமாகும். நேற்றுதான் உலகம் முழுவதும் இரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. பிறர் உயிர்களைக் காப்பதற்காக இரத்த தானம் செய்பவரைப் போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இரத்தத்தில் ஏ,பி ,ஏபி மற்றும் ஓ வகை இரத்தப் பிரிவுகள் உள்ளது. விபத்துக் காலத்திலும் சிலருக்கு ஆபரேஷன் செய்யும் போதும் இரத்தம் தேவைப்படுகிறது. 18வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவரும் இரத்த தானம் செய்யலாம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்றுப் பரிசோதித்தப் பின்னரே இரத்தம் எடுக்கப்படும்.

blood donation is the best donation

இரத்தம் கொடுப்பதால் புது இரத்தம் நம் உடலில் சுரக்கிறது. ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி முகம் தெரியாத பல உயிர்களைக் காக்கவும் இரத்தம் பயன்படுகிறது. ஒரு முறை வானொலி தொலைக்காட்சியில் சுவாமிநாதன் என்பவர் பாடல்களை ஒலிப்பரப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மதுரையில் இருந்து ஒரு மருத்துவமனையின் டீன் போனில் அழைத்தார். அப்போது பேசிய அவர் மதுரைக்கு அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பயணிகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதிகளவில் இரத்தம் தேவைப்படுகிறது என்றும் இரத்த தானம் செய்ய விரும்புவோர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள் என்றார். சரி சொல்கிறேன் என்று போனை வைத்தார் சுவாமிநாதன். உடனே நான்கு வரியில் ஒரு அறிவிப்பை எழுதினார்.

ஓடிக் கொண்டிருந்தப் பாடலை நிறுத்திவிட்டு அவசர அறிவிப்பு மதுரையில் உள்ள கிரஸ்கிரவுண்டிங் மருத்துவமனையில் பேருந்தில் விபத்துக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. இரத்தம் கொடுப்பவர் உடனே மருத்துவமனை வளாகம் செல்லவும் என சுவாமிநாதன் அறிவித்தார். மீண்டும் ஒரு முறை அறிவித்து விட்டு இரண்டு பாடல்களை ஒலிப்பரப்பினார்.

சும்மா இருந்தால் பயம் தான் வரும்.. ஆக்ஷனில் இறங்குங்கள்!சும்மா இருந்தால் பயம் தான் வரும்.. ஆக்ஷனில் இறங்குங்கள்!

அப்பொழுது மீண்டும் மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. அதில் அந்த அறிவிப்பை நிறுத்திவிடுங்கள் என்றார் டீன். ஏன் என்றுக் கேட்டதற்கு தங்களி்ன் அறிவிப்பால் மருத்துவமனையின் ஒரு பெரிய கூட்டமே திரண்டு விட்டது. அவர்களுக்கு இரத்தம் எடுக்க எங்களிடம் போதிய கருவிகள் இல்லை என்றார்.

இரத்த தானம் செய்வதால் நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி புது இரத்தம் சுரப்பதினால் நம் உடலும் மனதும் சுறுசுறுப்படைகிறது. எனவே இரத்த தானம் செய்வோம் உயிர்களைக் காப்போம்.

English summary
இரத்த தானம் மனிதனின் உயிர் காக்கும் சிறந்த தானமாகும். நேற்றுதான் உலகம் முழுவதும் இரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. பிறர் உயிர்களைக் காப்பதற்காக இரத்த தானம் செய்பவரைப் போற்றும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்தத்தில் ஏ,பி ,ஏபி மற்றும் ஓ வகை இரத்தப் பிரிவுகள் உள்ளது. விபத்துக் காலத்திலும் சிலருக்கு ஆபரேஷன் செய்யும் போதும் இரத்தம் தேவைப்படுகிறது. 18வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவரும் இரத்த தானம் செய்யலாம். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்றுப் பரிசோதித்தப் பின்னரே இரத்தம் எடுக்கப்படும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X