For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சார் லீவு கொடுங்க.. கொரோனா அறிகுறி இருக்கு.. எனக்காக கேட்கல சார்.. அசரடித்த 13 வயது மாணவனின் லெட்டர்

விடுப்பு கேட்டு பள்ளி மாணவன் கடிதம் வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "சார்.. எனக்கு லீவு கொடுங்க.. கொரோனா அறிகுறி இருக்கு.. இருமல் சளி இருக்கு.. எனக்காக லீவு கேட்கலை.. மற்ற மாணவர்களுக்காகத்தான்" என்று 13 வயது மாணவன் எழுதிய லீவு லெட்டர் இணையத்தில் பெரும் பரபரப்புடன் வைரலாகி வருகிறது.

Recommended Video

    எனக்கு கொரோனா அறிகுறி... லீவ் கேட்ட மாணவன்

    கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் உச்சக்கட்ட கலக்கத்தை தந்து வருகிறது.. இதில் ஒரே ஒருவருக்குதான் அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.. ஆனால் அவரும் குணமடைந்து விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கரே நம் வயிற்றில் பாலை வார்த்துவிட்டார்.

    இதைதவிர, தீவிர தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் விடாமல் கையில் எடுத்து வருகின்றன... அதன்ஒரு பகுதியாகத்தான், "கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... கைக்குட்டையை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    சளி, இருமல்

    சளி, இருமல்

    குறிப்பாக காய்ச்சல் சளி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு மாணவன் விடுப்பு கடிதம் எழுதியுள்ளார்.. சென்னை முகலிவாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் அந்த மாணவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.. அவர் ஆசிரியருக்கு ஒரு லீவு லட்டர் எழுதியுள்ளார்.

    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    அதில், "சார்.. எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன. மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு (medical leave) எடுத்துக் கொள்கிறேன். முன்னதாக சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. என்னுடைய விடுப்பு நாட்களை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

    லீவு லட்டர்

    லீவு லட்டர்

    அது மட்டுமல்ல.. இந்த லீவு லட்டரை சோஷியல் மீடியாவிலும் பதிவேற்றியுள்ளார்.. கடிதமும் வைரலாகி விட்டது.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி நிர்வாகம், மாணவனின் பெற்றோரை கூப்பிட்டு பேசியது.. அப்போதுதான் லட்டரை விளையாட்டாக எழுதிவிட்டதாக கூறினார்.. கிளாஸ் ரூமில் படிக்கும் நண்பர்கள்தான் இப்படி ஒரு லட்டரை எழுத சொன்னார்களாம்.. அவர்கள் பேச்சை கேட்டு எழுதியதாக விளக்கம் தந்தார்.

    பரிசோதனை

    பரிசோதனை

    இந்த சம்பவத்திற்கு மாணவனின் பெற்றோர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். இருந்தாலும், சளி, இருமல் அறிகுறி என்று மாணவன் ஒரு வார்த்தை சொல்லிவிடவும், அதை அலட்சியமாக நினைக்காமல், உரிய மெடிக்கல் டெஸ்ட் செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    chennai 8th std student writes letter to HM about need medical leave for coronavirus symptoms and this letter viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X