For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயா.. நான் எதிர்கட்சி சேர்ந்தவன்.. உங்களுக்கு நாங்க இருக்கோம்.. கண்டிப்பா தம்பி.. அசரடித்த முதல்வர்

தன்னார்வலரை பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: "ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன்... உங்களுக்கு நாங்க இருக்கோம்.. தலை வணங்குகிறேன்... கொரனா அழிக்கும் தங்களின் முயற்சிக்கு பின்னால் உறுதுணைய இருப்போம்" என்று முதல்வருக்கு ட்விட்டர்வாசி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    CM Edappadi press meet full speech | தமிழத்தில் கொரோனா தொற்று 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

    கொரோனாவைரஸ் பரவல் தமிழகத்தில் ஊடுருவதற்கு முன்பிருந்தே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. தீவிர தடுப்பு நடவடிக்கையை கையில் எடுத்து 144 உத்தரவையும் பிறப்பித்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அசத்தலான வேலையை பார்த்து வருகிறார்.. நேரடி ஆய்வு, ஆலோசனை கூட்டம், செய்தியாளர் சந்திப்பு என றெக்கை கட்டி பறந்து ஒவ்வொன்றையும் மிக மிக கவனமாக கையாண்டு வருகிறார்.

    டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா? டிரம்ப் செய்த தவறு.. சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த 4.3 லட்சம் பேர்.. கொரோனா இப்படித்தான் பரவியதா?

    வெளியே வராதீங்க

    வெளியே வராதீங்க

    இதை தவிர, மணிக்கொருதரம் கொரோனாவைரஸ் குறித்த விவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள், அட்வைஸ்களை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டு வருகிறார். பெரும்பாலும் முதல்வரின் அறிவுரை, யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீங்க என்பதான். அந்த வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

    விளம்பரம்

    விளம்பரம்

    அதில், ‘நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைப்போம்' என்ற விளம்பரத்தை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் தூய்மை பணியாளர்கள், போலீசார், டாக்டர்கள், நர்ஸ்கள் போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து, பாராட்டியும் வருகின்றனர்.

    கிறிஸ்டோபர்

    கிறிஸ்டோபர்

    அதில் கிறிஸ்டோபர் என்பவரும் ஒருவர்.. இவர் முதல்வரிடம் ஒரு சந்தேகம் கேட்டு ட்வீட் போட்டார். அதில், "ஐயா இந்த லிஸ்டில் எங்களை போன்ற சமூக தன்னார்வலர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்... அவ்வாறு செய்தால் அது எங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்கம் தரும்" என்றார். இதனை பார்த்த முதல்வர், உடனடியாக கிறிஸ்டோபருக்கு பதில் தந்துள்ளார். "கண்டிப்பாக தம்பி, தங்களை போன்ற தன்னார்வலர்களின் பணியும் பங்களிப்பும் அளப்பரியது. கொரோனாவிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களைக் காக்க ஓயாது பணியாற்றி வரும் தங்களுக்கும், தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுதல்களும்!' என பதிலளித்துள்ளார்.

    பாராட்டு

    பாராட்டு

    இந்த ட்வீட்களை பார்த்த பாபு அருணாச்சலம் என்பவர் முதல்வருக்கு சிறப்பான பாராட்டை ட்வீட் மூலம் தெரிவித்தார்.. அதில், "ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன்... இந்த கொரோனாவை கட்டுப்படுத்த இரவுபகல் பாராமல் உங்களின் இந்த அளப்பரிய பணியை பார்த்து தலை வணங்குகிறேன்... கொரனா அழிக்கும் தங்களின் முயற்சிக்கு பின்னால் நாங்களும் இருக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    யார் என்ன சந்தேகம், கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக செவிசாய்த்து வருகிறார் முதல்வர்.. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தாலும் அதனை நிராகரிக்காமல் உடனே ஏற்று கொண்டு ஆமோதிக்கிறார்.. எதிர்க்கட்சியினரின் பாராட்டையும் எளிதாக பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் வெகுஜன மக்களிடம் எடப்பாடியார் நெருங்கியே இருப்பதால்தான்!!

    English summary
    coronavirus: cm edappadi palaniswami replies to volunteer tweet for corona work
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X