For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்போ.. நோயாளிகள்தான் ரொம்ப முக்கியம்".. வியக்க வைக்கும் கேரள நர்ஸ்கள்!

திருமணத்தை தள்ளி வைத்து சேவையில் குதித்த பெண் டாக்டர்கள் பாராட்டை பெற்று வருகின்றனர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "இப்போ கல்யாணம்தான் ரொம்ப முக்கியமா? நாங்க இன்னொரு நாளில்கூட கல்யாணம் செய்துப்போம்.. அதைவிட நோயாளிகளை காப்பாற்றுவதே எங்கள் லட்சியமாக இருக்கிறது.. கொரோனாவை ஒழிப்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது" என்று கேரள நர்ஸ்கள், பெண் டாக்டர்கள் சொல்லி உள்ளது அனைவரையும் வியக்க வைத்து வருகிறது!!

Recommended Video

    இந்தியாவுக்கு வழிகாட்டி... கொரோனாவை கேரளா எதிர்கொண்டது இப்படி தான்

    கொரோனாவைரஸ் கடுமையாக தாக்க தொடங்கியதில் இருந்தே டாக்டர்களின் சேவை அளப்பரியது.. நர்ஸ்களும், மருத்துவ ஊழியர்களும் தங்கள் சொந்த பந்தங்களை மறந்து ஆஸ்பத்திரியே கதி என்று விழுந்து கிடக்கின்றனர்.

    இரவு, பகல் பாராமல் இவர்கள் செய்யும் சேவை உலக மக்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.. ஒட்டுமொத்த மருத்துவ துறையும் தங்களது குடும்பம், சுக துக்கத்தை மறந்து கொரோனா பாதித்த மக்களுக்கு அயராமல் பாடுபட்டு வருகின்றனர்.

    கேரளா

    கேரளா

    சொந்த பந்தம் சுயநலத்தை தூக்கி தூர வைத்துவிட்டு சமூக பணியில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் கேரளாவில் ஒரு ஜோடி நிச்சயமான தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது! திருவனந்தபுரம் கனியகுளங்கரா பகுதி போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பிரசாத்.. இவருக்கு 32 வயதாகிறது.

     கொரோனாவைரஸ்

    கொரோனாவைரஸ்

    இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள அரசு சுகாதார மையத்தில் டாக்டராக வேலை பார்க்கும் ஆர்யாவுக்கும் வீட்டில் கல்யாணம் நிச்சயித்திருந்தனர். இந்த மாதம்தான் கல்யாணம்.. அதற்கான ஏற்பாடுகளும் முன்பே தயாராகி இருந்தது. பிறகு திடீரென கொரோனாவைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகமானதும், குறைவான உறவினர்களை மட்டும் அழைத்து கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

    பிரசாத்

    பிரசாத்

    இந்த சமயத்தில்தான் மணமக்கள் 2 பேரும் தங்களுக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று ஒருசேர முடிவு எடுத்துள்ளனர்.. மணமகள் ஆர்யா டாக்டர் என்பதால் சிகிச்சை பணியில் இருந்தாலும், பிரசாத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.. இந்த நேரத்தில் கல்யாணம் செய்து கொண்டால் அது தங்களுடைய சேவைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று முடிவு செய்து, கல்யாணத்தை தள்ளி வைத்துள்ளனர்..

     திருமணம்

    திருமணம்

    ஆனால் இவர்கள் 2 பேரின் குடும்பத்திலும் இதற்கு லேசில் ஒப்புக் கொள்ளவில்லை.. நிலைமையை மணமக்கள் அவரவர் வீட்டில் புரிய வைத்தனர்.. அதற்கு பிறகே திருமணம் தள்ளி போட ஒப்புக் கொண்டனர்.. இந்த சம்பவம் பெரும் பாராட்டை மணமக்களுக்கு பெற்று தந்து வருகிறது. இதேபோல, மஞ்சேரியில் தீப்தி என்ற தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ், சுதீப் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.. ஆனால் கல்யாணத்துக்கு அன்றைய தினம் ஒருநாள் மட்டுமே லீவு எடுத்துக் கொண்டு, மறுநாள் டியூட்டிக்கு வந்துவிட்டார்.

    சேவை

    சேவை

    இந்த வகையில் பாராட்டுக்குரிய மற்றொரு பெண் டாக்டர் ஷிபா..கண்ணூர் பகுதியில் உள்ள பரியரம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.. துபாய் மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்து நாளும் குறித்தனர்.. அப்போது "எனக்கு இப்போ கல்யாணமா முக்கியம்.. இன்னொரு நாளில்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.. கொரோனா வார்டில் உள்ளவர்களை நான் முதலில் காப்பாற்ற வேண்டும்.. என்னால் ஆன சேவையை செய்ய வேண்டும்" என்று சொன்ன ஷிபா, தன்னுடைய கல்யாணத்தையே கொரோனா பாதித்தவர்களுக்காக தள்ளி வைத்துள்ளார்.

     சபாஷ்

    சபாஷ்

    சென்ற மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்படைந்த மாநிலங்களில் கேரளா 2வது இடத்தில் இருந்தது... இப்போது எங்கோ பின்னாடி தள்ளப்பட்டுள்ளது என்றால் அதற்கு இதுபோன்ற உயரிய மனம் கொண்ட மருத்துவ ஊழியர்களின் சேவையே முக்கிய காரணம்! அதனால்தான், காலங்காலமாக கடவுளுக்கு அடுத்ததாக கையெடுத்து கும்பிடகூடிய அளவுக்கு இவர்கள் போற்றப்பட்டு வருகிறார்கள்!!

    English summary
    coronavirus: kerala doctors postponed marriage to treat corona patients
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X