For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: தனிநபர் இடைவெளியை அக்கறையுடன் பின்பற்றும் ஒடிஷா திராவிடர் பழங்குடிகள்

Google Oneindia Tamil News

கோராபுட்: கொரோனா பரவுதலைத் தடுக்கும் வகையில் தனிநபர் இடைவெளியை ஒடிஷா திராவிடர் பழங்குடிகள் பின்பற்றி வரும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Coronavirus: Social distance images of Odisha Tribes go to viral

இந்தியப் பழங்குடிகளே

இந்தியாவின் பன்மியப் பண்பாட்டின் ஆணிவேர்கள்.

இந்தப் படத்தில் நாம் காணும் பழங்குடிகள் வாழும் பகுதிகளைத் தான் தண்டகாரண்யம் என்று நமது இதிகாசம் குறிக்கிறது..

நான் 1980 களின் இறுதியில் இப்பகுதியில் பணியாற்றி இருக்கிறேன்.

"பண்பெனப் படுவது பாடறிந் தொழுதல்"- என்பது சங்க இலக்கியப் புரிதல்.

இந்தியா என்ற கருத்தியல் பெருநகர மக்களாலும் இணையப் போராளிகளாலும் அல்லது வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது இந்தியாவுக்கு யோசனை சொல்கிற முன்னாள் இந்தியர்களாலும் மட்டும் கட்டமைக்கப்பட்டதல்ல.

இதோ பாடறிந்தொழுகும் பழங்குடிகள்!

இவர்களால் இந்தியா மீளும்.

ஏனெனில் ‌யார் வயிற்றிலும் அடிக்காமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மலைகளிலும் காடுகளிலும் வாழ்பவர்கள். அவர்களது பண்பாடே அவர்களது இருப்பின் காரணம். அவர்களின் இருப்பே அவர்களது பண்பாட்டின் அடையாளம்.

கொரோனா தொற்று- இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இன்று நுழைகிறது: ப. சிதம்பரம் கொரோனா தொற்று- இந்தியா மிக முக்கியமான கட்டத்தில் இன்று நுழைகிறது: ப. சிதம்பரம்

ஏனெனில் அது
திணைக்கோட்பாடு.
சூழல் சார்ந்த வாழ்வியல்.

வணங்குகிறேன் மக்களே. இவ்வாறு ஆர். பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

English summary
Social distance images of Odish Tribes went viral in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X