For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடைகளைப் பார்க்காதீர்கள்.. இலக்குகளே முக்கியம்

Google Oneindia Tamil News

எப்போதுமே நமது இலக்குகளை நோக்கி முன்னேறும்போது அதன் மீது மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும். மாறாக தடைகளை நினைத்துக் கவலைப்பட்டால் நமது இலக்கு நோக்கிய பயணம் சிதறிப் போய் விடும். தடைகளை தவிர்த்து விட்டு இலக்கை மட்டுமே குறி வைத்து முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.

பல தடைகளைத் தாண்டினால் தான் பிம்மாண்டமான வெற்றியை அடைய முடியும். தடைகளை நினைத்து வருந்தினால் நம்மால் நம் இலக்குகளை அடைய முடியாது. கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் நம்முடைய சிந்தனை செயல் யாவுமே நம் இலக்கை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் அதில் வெற்றி பெற முடியும்.

dont see the hurdles aim for success

ஒரு செயலில் வெற்றிப்பெற வேண்டுமென்றால் கடுமையான உழைப்பும் முயற்சியும் தேவை. தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றியை அடைய நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். எத்தனையோ தடைகள் வந்தாலும் நான் அவற்றிலிருந்து மீண்டு வருவேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

சிலந்தியைப் போல வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வர வேண்டும். வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு வழிக்கல்லப்பா என்பது போல எத்தனை எத்தனையோ சோதனைகள் வரும் நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து சாதனைப் படைப்பவனே சிறந்த மனிதன்.

எத்தனையோ மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைய பல தடைகளைக் கடந்து வந்தனர். அஹிம்ஸையை உலகிற்கு உணர்த்திய காந்தியடிகள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார். அந்த சுதந்திரத்தை அடைய முயலும் போது பல தடைகள் ஏற்பட்டது.

அவற்றையெல்லாம் தாண்டி தன் இலக்கில் வெற்றி அடைந்தார். கொடி காத்த குமரன் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவர் ஆங்கிலேயர் அடித்த போதிலும் உயிர் நீங்கும் வேளையிலும் கொடியைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டிருந்தார். எல்லா மனிதருக்கும் வாழ்வில் ஓர் இலக்கு உண்டு. அதற்காக கடும் முயற்சி எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஜெயிக்க முடியும்.

தடைகளை கண்டு அஞ்சாதீர்கள். ஒரு சிற்பி கல்லைச் செதுக்கி நல்ல ஓவியமாக மாற்றுகிறான் அது போலத்தான் தடைகளும். அந்த தடைக்கற்கள் நம்மை நன்றாகச் செதுக்கி வெற்றியை அடைய நம்மை மேன்மேலும் தூண்டுகிறது. தடையைக் கண்டு அஞ்சாமல் வெற்றியை நோக்கி வீறு நடை போடுங்கள். தடைகளை உடைத்தெறியுங்கள் இலக்குகளை அடையுங்க.

யோவ் மாப்ளை.. போட்டுத் தாக்கி கலாய்த்த மாயன்.. சங்கடத்தில் நெளிந்த மகா!யோவ் மாப்ளை.. போட்டுத் தாக்கி கலாய்த்த மாயன்.. சங்கடத்தில் நெளிந்த மகா!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப தடைகளைக் கண்டு அஞ்சாமல் அதை எதிர்நோக்கத் தயாராகுங்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல உங்களுடைய சிந்தனை எப்பொழுதும் இலக்கை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். நம்மால் நிச்சயம் நம் இலக்கை அடைய முடியும்

English summary
Always we should not see the hurdles in the life, but aim for success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X