For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சும்மா இருந்தால் பயம் தான் வரும்.. ஆக்ஷனில் இறங்குங்கள்!

Google Oneindia Tamil News

ஒரு பழமொழி உண்டு "சோம்பிக் கிடந்தால் பயந்து சாவாய்.. செயலில் இறங்கினால் புயலாய் மாறுவாய்".. என்று. எத்தனை உண்மை பாருங்கள்.

நிறையப் பேர் இன்று சோம்பிப் போய்க் கிடக்கிறார்கள்.. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனப்பான்மைதான் பலருக்கும் உள்ளது. அப்படிப்பட்டவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. இப்படிப்பட்டவர்கள் மனதில் எப்போதுமே ஒரு வகையான ஸ்திரமின்மை இருக்கும்.. பயம் இருக்கும்.

அதுவே துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களைப் பாருங்கள்.. தைரியமாக எதிலும் இறங்குவார்கள். எதையும் தைரியமாக செய்வார்கள்.. இவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவர்கள்.

10ம் வகுப்பு தேர்வை போலவே.. தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? அமைச்சர் அன்பழகன் பதில்10ம் வகுப்பு தேர்வை போலவே.. தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? அமைச்சர் அன்பழகன் பதில்

 பணிவோடு துணிவும்

பணிவோடு துணிவும்

எந்த ஒரு செயலையும் துணிவோடு செய்ய வேண்டும். வாழ்க்கையில் ஓய்வு வேண்டும் ஆனால் ஓய்வே வாழ்க்கையாகி விடக் கூடாது. குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்பார்கள். வேலை செய்யாமல் இருக்கும் செல்வத்தைக் கொண்டு உட்கார்ந்து உண்டால் ஒரு காலத்தில் ஒரு பிடி உணவுக்கே அல்லல் பட நேரிடும். எச்சூழ்நிலையிலும் வாழப் பழக்கிக் கொள்ளும் மனிதனே சாதனையாளனாகிறான்.

 வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

காலத்திற்கேற்ப செய்யும் வேலையை மாற்றிக் கொள்பவனே வாழ்வில் வெற்றியடைகிறான். முன்னோர்கள் பலர் ஓய்வறியா உழைப்பாளிகளாக இருந்தனர். பெண்கள் வயல் வேலைக்குச் செல்வர். துணி தைத்துக் கொடுப்பர். ஆனால் இன்றோ இந்த நவநாகரிக உலகில் மின்சாதனப் பொருட்களால் வீட்டு வேலைகள் சீக்கிரமே முடிந்துவிடுகின்றன. இதனால் நேரம் அதிகம் கிடைக்கிறது. கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் வருமானத்தை ஈட்டும் வகையில் பொன்னான நேரமாக மாற்றுங்கள்.

 பொருள் ஈட்ட ஆயிரம் வழி

பொருள் ஈட்ட ஆயிரம் வழி

ஆடை அலங்காரம் செய்வது வீட்டிலேயே கேக் செய்து விற்பனை செய்வது இப்படி எத்தனையோ வேலைகள் செய்து பொருள் ஈட்டலாம். உங்களுக்கு கதை கவிதை நன்றாக எழுத வருமா. அப்பொழுது ஓய்வு நேரத்தை வீணாக்காமல் கதை எழுதுங்கள். அதன் மூலமும் வருமானம் ஈட்டலாம். அடுத்து என்ன செய்யலாம் என்று நம் மனது யோசிக்க மூளை செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

 சாதனை படைக்க வேண்டும்

சாதனை படைக்க வேண்டும்

நானும் இம்மண்ணில் பிறந்தேன் வளர்ந்தேன் என இல்லாமல் பிறந்தேன் வளர்ந்தேன் சாதனைப் படைத்தேன் என இருக்க வேண்டும். இது கொரோனா காலம் இன்று பலர் வருமானம் ஈட்டப் பெரிதும் அல்லல் படுகின்றனர். அவர்கள் வாழை இலையைப் பயன்படுத்தி தட்டு செய்யலாம். வீட்டுத்தோட்டத்தில் காய்கறி பயிரிடலாம். சோம்பி்க் கிடப்பதால் பயனில்லை சோம்பலை வி்ட்டொழித்து ஆக்ஷனில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம்

English summary
Some will have more fear in mind. They have to shed this out of their mind, then only they can acheive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X