ரொம்ப டல்லா இருக்கீங்களா.. அப்ப இதைப் படிங்க!
ரொம்ப டல்லாக ஃபீல் பண்றீங்களா.. சோகமாக இருக்கா.. எரிச்சலா இருக்கா.. கவலையே படாதீங்க.. மனசை அமைதிப்படுத்துங்க. ஈஸியா இதை ஹேன்டில் பண்ணலாம்.
வலியில்லாமல் எதுவும் கிடையாது.. எனவே வருத்தத்தை விடுங்க. தோல்வி இல்லாமல் வெற்றி கிடையாது.. எனவே எரிச்சலை விடுங்க.. சோர்வு இல்லாமல் மகிழ்ச்சி கிடையாது.. எனவே கவலையை விடுங்க.. ரொம்ப சிம்பிளான விஷயம்ங்க வாழ்க்கை. எடுத்துக்கிற விதத்தில்தான் அது இருக்கு.

எதுவும் சிரமம் இல்லங்க. நாம நினைச்சா எதையும் ஈஸியா செய்யலாம். முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். தோல்வியைக் கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு உங்கள் முயற்சியைத் தொடருங்கள். விரைவில் வெற்றி உங்கள் வசமாகும். எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாக செய்யும் போது அதில் வெற்றி நிச்சயம் அடைவீர்கள்.
நம்மால் வெற்றி அடைய முடியவில்லையே என்று நினைத்து சோர்வு அடையாமல் வெற்றியை எதனால் தவற விட்டீர்கள் என்ற காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால் வெற்றி என்றும் உங்கள் வசம் தான். தோல்வி அடைவதில் தவறில்லை ஆனால் தோற்றுக் கொண்டே இருப்பது தான் தவறு. சிலந்தி தன் வலையைப் பின்னி முடிப்பதற்குள் பல முறை அறுந்தாலும் தன் முயற்சியை விடாது அந்த வலையைப் பின்னி முடிக்கும். அது போல நாமும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம் தன்னம்பிக்கையை மட்டும் விட கூடாது.
சோர்ந்து போவதால் மனதில் உள்ள கொஞ்ச நம்பிக்கையும் உங்களை விட்டுச் சென்று விடும். உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும் என்று நம்புங்கள். எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்து துணிந்து போராடுங்கள். போராடி இங்கே சாதனைப் படைத்தவர் பலர் உன்னால் முடியும் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உங்களுக்குத்தான். மனசுக்கு பிடிச்ச பாடலைக் கேட்டுட்டு உங்கள் செயலைத் தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.