For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பள்ளி மாணவர்களா நீங்கள்.. அப்படினா இது உங்களுக்குதான்.. இலவச நீட் பயிற்சி!!!

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு பற்றி நாம் அறிந்ததே. அதை ஒழிக்கும் போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், நீட் தேர்வும் நிற்காமல் போய்க்கொண்டுதான் உளdளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதில் தடுமாற்றம் உள்ளது.

அதன் வெளிப்பாடே அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் பெரிய அளவில் வெல்ல முடியாமல் வீழ்ந்து கொண்டுள்ளனர் நமது மாணவர்கள். இதனால் பறிபோன உயிர்களும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. இந்த நிலையில் அரசே தற்போது இலவச நீட் பயிற்சி அளிக்கிறது.

 Free NEET coaching for Govt school students

மறுபக்கம் வணிக ரீதியில் நீட் பயிற்சிகளுக்கு நிறைய மையங்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இங்கு வசூலிக்கப்படும் பயிற்சி கட்டணம், பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். கிராமப்புற குழந்தைகளுக்கு மருத்துவர் கனவை எட்டா கனியாகவே மாற்றி விடும். ஆனால் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களால், அதை செலுத்தி தங்கள் மருத்துவ கனவை நினைவாக்க உதவுகிறது சென்னையில் உள்ள ஒரு அமைப்பு.

 Free NEET coaching for Govt school students

வட சென்னை மாணவர்களுக்காக Care and Welfare என்ற சமூக அமைப்பு YMS அகாடமியுன் இணைந்து நீட் பயிற்சியை முற்றிலும் இலவசமாக அளிக்கிறது. பயிற்சி வகுப்புகள் காலை 10:00 மணியிலிருந்து தொடங்கி மாலை 7:00 மணி வரை நடைபெறும். மிகவும் திறமையான மற்றும் புகழ்பெற்ற ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கிறார்கள். பயிற்சியுடன் கூடுதலாக, மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் விதமாக சமூக ஆர்வல அமைப்புகளிலிருந்து, சிறந்த பேச்சாளர்களால் ஊக்கமளிக்கும் வகுப்புகளும் அளிக்கப்படும்.

 Free NEET coaching for Govt school students

தற்கொலைக்கு முற்றுப்புள்ளி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், நமது எண்ணங்களின் சக்தி என மாணவர்களுக்கு, உங்களால் ஊக்கமளிக்கும் விதமாக பேச முடியும் எனில் நீங்களும் அவர்களுடன் கலந்து கொள்ளலாம். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் வகுப்புகள் எடுக்கும் தன்னார்வலர்களை எதிர் பார்க்கிறார்கள் விருப்பம் உள்ளவர்கள் அவர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே பதிவு செய்தால், அதன்படி இணைந்து செயல்படலாம் என்பது அவர்களின் கருத்து. முழு திட்டங்களும் கல்வி ஆதரவாளர்களையும், முகநூல் நண்பர்களையும் சார்ந்துள்ளது. இதற்கான தேவைகள், வரவுகள் மற்றும் செலவுகள் உங்களுக்கு வெளிப்படையாகவே முகநூலில் தெரியப்படுத்தப்படும் என்கிறார்கள்.

 Free NEET coaching for Govt school students

இது முழுக்க முழுக்க அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கே. தனியார் மற்றும் சிபிஎஸ்இ மனவர்களுக்கானது அல்ல. இதற்காக எந்த அரசு பள்ளி மாணவர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிக்க படமாட்டாது. இது முற்றிலும் இலவச பயிற்சியே. இனி ஒரு மருத்துவ கனவை நீட்டின் பேரால் புதைக்கக் கூடாதுஎன்பதே CARE and WELFARE-ன் எண்ணம். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத தகுதி வாய்ந்த மாணவ கண்மணிகளுக்கு தெரிய படுத்துங்கள். 2019ம் வருட நீட் தேர்வை நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்காக இந்த வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு:

சிந்து ராம், சிஇஓ, Care and Welfare
ஒய்எம்எஸ் அகாடமி
பழைய எண் 284, புதிய எண் 104
பேப்பர் மில்ஸ் சாலை
எச்டிஎப்சி வங்கிக்கு மேலே, ஜிஆர்டி ஜூவல்லர்ஸுக்கு அடுத்து, பெரம்பூர், சென்னை 11
போன்: 044 48676160
அலைபேசி: 7401717555, 7401717888

தகவல்: திவ்யபாலா

English summary
A North Chennai based Care and Welfare organistaion is giving free NEET coaching for Govt school students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X