For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாந்து பார்.. காலுக்குக் கீழே எதையும் தேடாதே!

Google Oneindia Tamil News

மேலே அண்ணாந்து நட்சத்திரத்தைப் பார்.. உன் காலுக்குக் கீழே எதையும் தேடாதே. நீ பார்ப்பதை உணர கற்றுக் கொள். இந்த உலகம் எப்படி உருவானது என்பதை எண்ணிப் பார்.. நிதர்சனம் புரியும்.. இது ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பொன்மொழி.

நிறையப் பேருக்கு தாங்கள் எப்படி உருவானோம் என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள். இயற்கையை அழித்து விட்டு நாம் வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

விண்ணோடு மேளச்சத்தம் என்ன.. மண்ணோடு சின்ன தூறல் என்ன என்று இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கை நம்முடையது. காலையில் எழுந்தவுடன் தூய்மையான காற்று முகத்தில் படும்போது ஏற்படும் சுகமே அலாதியானது. அதுவே நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

 சாப்பாடு முக்கியம்

சாப்பாடு முக்கியம்

விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இன்று பலர் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் ஐ.டி நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர். நம்முடைய வாழ்வில் உணவு பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் அனைவரும் வாங்குவது விவசாயம் சார்ந்த பொருட்களை தான். அதைத் தாண்டி இப்போது நமக்கு எதுவுமே தேவையில்லை. வயிற்றுக்கு சோறு போதும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

 மழையைக் கொண்டாடுங்கள்

மழையைக் கொண்டாடுங்கள்

இயற்கையின் அழகை நேரம் கிடைக்கும் போது ரசியுங்கள். மழையைக் கொண்டாடுங்கள். இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் செயல்கள் தான் நாளடைவில் நமக்கு பேரழிவைத் தருகிறது. இன்று மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று தூய்மையாக உள்ளது. ஏன் சத்தமே இல்லாமல் இந்த பூமிப் பந்தே எத்தனை அழகாக காட்சி தருகிறது பாருங்கள்.

 அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்

நம் முன்னோர்கள் அன்றே சொன்னார்கள். வீட்டிற்கு ஒரு பசுவும் முருங்கை மற்றும் வாழை மரம் இருந்தால் போதும் என்று. இயற்கையோடு இணைந்து வாழுங்கள். வீட்டில் மரம் வளருங்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கும் போது மனம் மகிழ்ச்சி அடையும். அது மட்டுமல்லாமல் நமது சுற்றுச்சூழலும் புத்துணர்ச்சியோடு திகழும்.. அதனால் ஏற்படும் பலன்களை இப்போது கண் கூடாகவே பார்க்கிறோம்.

 வளங்களைக் காப்போம்

வளங்களைக் காப்போம்

வானத்திலுள்ள மேகங்களின் அழகை ரசியுங்கள். இயற்கை இல்லையேல் நாமும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.இயற்கை வளங்களை இனியாவது பாதுகாப்போம். முடிந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு விவசாயம் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு சிறுவயதிலேயே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அதன் அழகை ரசிக்கவும் கற்றுக்கொடுங்கள்.

English summary
Always Nature is the supreme power, human being should never forget this basic ever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X