For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திரா நூயிக்கு ஒரு சல்யூட்!

சென்னையை சேர்ந்த ஒரு பெண் இந்திரா நூயி அமெரிக்க வரை சென்று குளிர்பான தொழிலின் பெரிய ஜாம்பவன் என்றழைக்கப்படும் பெப்சி (pepsi) நிறுவனத்தில் பணிபுரிந்து பல சாதனைகள்...

By Rajeswari
Google Oneindia Tamil News

நியூயார்க்: சென்னையை சேர்ந்த இந்திரா நூயி அமெரிக்க கார்ப்பரேட் துறையில் பெண்களுக்கு எதிராக உள்ள அனைத்து தடைகளையும் தாண்டி குளிர்பான தொழிலின் பெரிய ஜாம்பவான் என்றழைக்கப்படும் பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக (CEO) 2006 ஆண்டு பதவி ஏற்று இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரு உத்வேகமாக திகழ்ந்தார்.

சாதாரணமாக ஒரு பெண் தன் சொந்த நாட்டில் சிறந்து விளங்குவதையே ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் இந்திரா நூயி அமெரிக்கா வரை சென்று குளிர்பான தொழிலின் பெரிய ஜாம்பவான் என்றழைக்கப்படும் பெப்சி நிறுவனத்தில் பணிபுரிந்து பல சாதனைகள் புரிந்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தார்.

Indra nooyi an inspirational woman

இந்நிலையில் பெப்ஸி நிறுவனம் தற்பொழுது தலைமை அதிகாரியாக உள்ள இந்திரா நூயி வரும் அக்டோபர் 6ஆம் தேதி பதவி விலக போவதாக தெரிவித்தது. அவர் கடந்த 24 ஆண்டுகள் பெப்ஸி நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், அதில் 12 ஆண்டுகள் தலைமை அதிகாரியாக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளது. அவருக்கு பின்னர் ராமன் லகுவர்ட்டா என்பவர் அடுத்த CEO வாக பதவி வகிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

English summary
This article about Ms. Indra Nooyi, Chennai, has been the CEO of the Pepsi Company in 2006 and has been a inspiration icon to all youth and women in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X