For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஃப்ரிட்ஜ்" மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் அமேசான் ஓனர்!

அமேசான் ஓனராக இருந்தாலும் வாழ்வில் ஜெயிக்க எனர்ஜி தேவைப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் தான் வாழ்க்கையில் சாதித்தற்கு காரணம் ஃபிரிட்ஜில் எழுதி வைக்கப்பட்டிருந்த சில வரிகள்தான் என்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் ஜெஃப் பீசோஸ். இவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் ஆவார்.

அமேசானில் வீட்டு உபயோக பொருட்கள், துணி மணிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், டேப்லட்கள் என அனைத்து பொருட்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பணம் செலுத்திவிட்டு ஆர்டர் செய்தால் போதும் வீட்டு வாசலில் வந்து நிற்கும்.

சாதனை

சாதனை

அத்தகைய அமேசான் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஆன்லைனில் பில்பாக் என்ற மருந்து விற்பனையகத்தை தொடங்கியது. 137.2 பில்லியன் டாலர்களாக இருந்த அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அமேசான் நிறுவனரின் மதிப்பு 141 பில்லியன் டாலர்களாக உயர்ந்துவிட்டது. இந்த சாதனை மற்ற தொழிலதிபர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது.

உந்துதல் சக்தி

உந்துதல் சக்தி

சில நேரங்களில் மல்டி மில்லியனர்களுக்கு ஊக்குவிப்பு, உந்துதலும் தேவைப்படுகிறது. இதற்காக ஜெஃப் பீசோஸ் என்ன செய்தார் தெரியுமா? தனது ஃபிரிட்ஜில் ரால்ஃப் வால்டோ எமர்சன் எழுதிய பொன் வரிகளை எழுதி வைத்துள்ளார். அதை பிரிட்ஜை திறக்கும் ஒவ்வொரு முறையும் படித்து கொண்டு உந்துதல் சக்தியை பெற்றுள்ளார்.

பொன் வரிகள் என்ன

பொன் வரிகள் என்ன

இதை பல ஆண்டுகளாக படித்து வருவதாக அவரே டுவிட்டரில் வெளியிட்டும் உள்ளார். அந்த பிரிட்ஜில் அப்படி என்னதான் எழுதி வைத்திருந்திருப்பார் ஜெஃப் என நினைக்கிறீர்களா. இதோ அந்த பொன் வரிகள்... இந்த பொன் மொழிகள் கொண்ட டுவீட்டை அவர் மே மாதம் டுவிட்டரில் வெளியிட்டார். இதை 11,000-க்கும் மேற்பட்டவர்கள் ரீடுவீட் செய்துள்ளனர். 33,500-க்கும் மேற்பட்ட லைக்ஸை பெற்றுள்ளது.

அமேசான் ஓனர் வெற்றி பெற...

அமேசான் ஓனர் வெற்றி பெற...

"எப்போதும் நன்றாக சிரித்து கொண்டே இருக்க, புத்திசாலி மக்களின் மதிப்பையும் குழந்தைகளின் அன்பையும் பெற, நேர்மையான விமர்சகர்களின் பாராட்டுதலை பெற, தவறான நண்பர்களின் துரோகத்தை சகித்துக் கொள்ள, மற்றவர்களில் சிறந்தவர்களை கண்டுபிடிக்க, ஆரோக்கியமான குழந்தைகள் மூலமாகவோ அல்லது நல்ல சமூகத்தை மீட்டெடுப்பதன் மூலமாகவோ நல்லவிதமாக இந்த உலகை விட்டு செல்ல, நம்மை மனதில் கொண்டவர்கள் ஒருவராவது நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள... இவற்றால் வெற்றி நிச்சயம்" என்பதுதான் அந்த பொன் வரிகளாகும்.

English summary
Bezos Amazon founder and CEO tweeted a photo of a printed out poem, captioning it, "Love this quote. It's been on my fridge for years, and I see it every time I open the door. #Emerson."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X