For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்க்கை குறுகியது.. முழுமைக்காக போராடுங்கள்!

Google Oneindia Tamil News

வாழ்க்கை மிக மிக குறுகியது.. கிடைத்த இந்தக் காலத்திற்குள் முழுமை அடைய முயற்சியுங்கள்.. முழுமை அடைய முடியாவிட்டால்.. கவலையே படாதீர்கள்.. முயற்சிகளில் மூழ்கி விடுங்கள். அது உங்களை முழுமைக்கு கொண்டு சென்று விடும்.. வாழ்க்கை முழுவதும் நீங்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பாருங்கள்.. அது உங்களுக்குத் திருப்தி தர வேண்டும்.. அதுதான் முக்கியம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள்.பரபரப்பாக ஓடும் மனிதனுக்கு என்றாவது ஒரு நாள் வாழ்விா திருப்தி அடைய வேண்டும். வாழ்க்கையில் நம் லட்சியத்தை அடைந்த பிறகாவது நாம் வாழ்வில் திருப்தியடைய வேண்டும். மனம் சோர்வடையும் போது உங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நினைவுகூறுங்கள்.

life is very short fight it out

ஒரு ஊரில் நந்தினி விநோதினி என்ற இரண்டு பெண்கள் இருந்தனர். இருவரும் பூ வியாபாரம் செய்து வந்தனர். நந்தினிக்குத் திருமணமாகி ராஜா என்ற ஒரு மகன் இருந்தான். விநோதினியும் திருமணமாகி ரங்கா என்று ஒரு மகன் இருந்தான். இருவரும் தங்களுக்குக் கிடைத்தப் பணத்தில் தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். நந்தினி தனக்குக் கிடைத்த வருமானத்தில் பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தி வந்தாள்.

ஆனால் விநோதினிஅதயோ தனக்குக் கிடைக்கும் வருமானம் போதவில்லையென வெளியில் கடன் வாங்கினாள். நந்தினியும் விநோதினியும் மதியம் இருவரும் சேர்ந்துச் சாப்பிடுவர். அப்போது ஒரு நாள் வினோதினி நந்தினியிடம் எனக்கு வரும் வருமானம் தான் உனக்கும் வருகிறது ஆனால் எனக்கு மட்டும் அது போதவில்லையே அது எப்படி நீ மட்டும் குடும்பம் நடத்துகிறாய் என்றாள்.

அதற்கு நந்தினி கிடைக்கும் வருமானத்தில் சிறுபகுதியை அவசர தேவைக்கு எடுத்து வைத்து விடுவேன் மீதிருக்கும் தொகையில் கஞ்சியோ சாதமோ வடித்துக் கொள்வோம். எங்களுக்குக் கிடைக்கும் வருமானம் எங்களுக்குப் போதுமானதாக உள்ளது.கிடைத்தது போதும் என்ற திருப்தி இருந்தாலே மேற்கொண்டு அதைத் தேடி நாம் செல்ல மாட்டோம் எனக் கூறினாள். அது மட்டுமல்ல பூக்கடையில் வேலை செய்து இன்று நான் பூ வியாபாரியாக மாறியுள்ளேன். அன்று ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று கஞ்சிக்காவது வழியிருக்கிறதே என்று என் மனம் திருப்தியடைகிறது என்றாள் நந்தினி. அவளுடையப் பேச்சைக் கேட்டுத் தன் தவறை உணர்ந்தாள் வினோதினி.

பார்த்தீர்களா சுட்டீஸ் நமக்குக் கிடைத்த விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு நாம் விளையாட வேண்டும்.எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என அடம்பிடிக்கக் கூடாது. நாம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ்வோம்.

English summary
Life is very short, we need to fight it out for anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X