For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாதியாக மாறிய "லாக்கப்" சந்திரன்.. தாயும் சேயும் நலம்.. சாலையோரம் நடந்த உணர்வு பெருக்கான டெலிவரி!

கர்ப்பிணி பெண்ணுக்கு எழுத்தாளர் சந்திரன் பிரசவம் பார்த்துள்ளார்

Google Oneindia Tamil News

கோவை: பனிக்குடம் உடைந்து, ரத்தப்போக்கும் ஏற்பட்ட நிலையில்... நடுரோட்டிலேயே ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.. இந்த நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.

Recommended Video

    தாதியாக மாறிய 'லாக்கப்' சந்திரன்.. தாயும் சேயும் நலம்.. சாலையோரம் நடந்த உணர்வு பெருக்கான டெலிவரி!

    சிங்காநல்லூர் பகுதி காமராஜர் சாலையில் துளசி லே அவுட் என்ற பகுதி உள்ளது.. இங்கு ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பிழைப்பு தேடி வந்தவர்கள்.. தனியாக வீடு என்று எதுவும் இல்லை.. இங்குள்ள ரயில்வே கேட் பகுதியிலேயே கூடாரம் போட்டு வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 26 வயது கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.. லாக்டவுனில் இருப்பதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத சூழல்.. இதனால் வலியால் துடித்த அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் முன்பு வந்தனர்.. ஒரு இடத்தில் பாதுகாப்பாக உட்கார வைக்கப்பட்டு 108 ஆம்புலன்சுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஆட்டோ

    ஆட்டோ

    ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டும் சந்திரன் என்பவர் ஆட்டோவை எடுத்து கொண்டு வந்தார்.. சந்திரன் ஒரு எழுத்தாளரும்கூட... கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றினார்.. ஆனால் அவருக்கு ஏற்கனவே பனிக்குடம் உடைந்து ரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது.. ஆனால், அந்த பகுதியில் இருந்த பெண்கள் கொரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணி பக்கத்தில் வரவே இல்லை.

    நிலைமை

    நிலைமை

    எனினும் சந்திரன் பெண்ணுக்கு உதவ முன்வந்தார்.. ஆனால் அவரை குடும்பத்தினர் அனுமதிக்க மறுத்தனர்.. ஆனால் அவர் ஹிந்தியில் பேசி நிலைமையை சொல்லவும், அவரை உதவி செய்ய அனுமதித்துள்ளனர். இதையடுத்து, ரோட்டோரத்திலேயே சந்திரன், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.. ஆண் குழந்தை பிறந்தது.. தக்க நேரத்தில் பிரசவம் பார்க்கவும் 2 உயிர்களும் காப்பாற்றப்பட்டது.

    தொப்புள் கொடி

    தொப்புள் கொடி

    அந்த குழந்தையை கையில் தாங்கி பிடித்தபடி ஆட்டோ சந்திரன் இருந்தார்... சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பிறகு சந்திரன் உதவியுடன் தொப்புள் கொடியை அகற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் தாய், சேய் இருவரையும் கோவை அரசு ஆஸ்பத்தியில் கொண்டு பேர் சேர்ந்தனர்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    தற்போது தாய் - சேய் நலம்.. ரோட்டோரத்தில் இளம்பெண்ணுக்கு ஆட்டோ சந்திரன் பிரசவம் பார்த்த வீடியோ காட்சிகள் இணையத்தில் படுவைரலாக போய் கொண்டிருக்கிறது.. எழுத்தாளர் சந்திரன் "லாக்கப்" என்ற நாவல் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் என்பதும் வெற்றிமாறன் இயக்கத்தில் அந்த கதைதான் விசாரணை என்ற படமாகவும் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது!!

    English summary
    lockdown: writer chandran helpd odisha pregnant woman in coimbatore, this video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X