For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்க்கா முக்கியம்.. ஜாலியா படிங்க.. அதேசமயம் ஆழ்ந்து படிங்க.. வெற்றி கை கூடும்!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்வுகளில் மதிப்பெண்தான் முக்கியமா.. இல்லை.. தேர்ச்சி பெறுவது முக்கியமா.. இல்லை.. படிப்பு என்பதே கற்று அறிவதுதான்.

நமது சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கில்தான் கல்வி கற்க வேண்டும். வெற்றி தோல்வி குறித்து சிந்தித்து மனதை போட்டு உழப்பிக் கொள்ளக் கூடாது. மாறாக சீரிய முறையில் ஊன்றிக் கவனித்துப் படித்து, அறிவை விருத்தி செய்யும் நோக்கில் ஆழமாக படிக்கும்போது நிச்சயம் வெற்றியே நம்மை வந்து சேரும்.

படிப்பது என்பது நம் அறிவை வளர்த்துக் கொள்வது என்பதை தாண்டி இன்றைய காலக்கட்டத்தில் எப்படியாவது மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கிவிட்டனர்.

வாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி? சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும் வாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி? சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்

மணப்பாடம்

மணப்பாடம்

மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவது என்பது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போலத் தான். ஆசிரியர் நடத்தும் பாடங்களை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். கணக்குப் பாடத்தில் சில பயிற்சிகள் பார்முலா தெரிந்தால் போட்டு விடலாம். அது போல தான் எல்லாப் பாடங்களும். ஒரு பாடத்தின் சாராம்சம் என்னவென்றுப் புரிந்து விட்டால் தேர்வில் மதிப்பெண் பெறுவது எளிது. இவ்வாறு படித்தால் எக்காலத்திலும் நமக்கு மறக்காது.

 சகஜமான ஒன்று

சகஜமான ஒன்று

தேர்வில் வெற்றித் தோல்வி என்பது சகஜமான ஒன்று. என்றுமே தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது. கஜினி முகம்மது இந்தியாவை பதினாறு முறைப் போர் தொடுத்த பின் தான் அவரால் இந்தியாவைக் கைபற்ற முடிந்தது. அவர் முதல் முறையிலேயே என்னால் முடியவில்லை என்று துவண்டு போயிருந்தால் பின்னாளில் இந்த வெற்றி சாத்தியமாயிருக்காது.

பள்ளியில் நடத்தும் பாடங்கள்

பள்ளியில் நடத்தும் பாடங்கள்

அன்றாடம் பள்ளியில் நடத்தும் பாடங்களை வீட்டில் வந்து மீண்டும் படிக்க வேண்டும். மறுநாள் அப்பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்ளுங்கள். படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவுக் கூறுங்கள். அப்போது தான் உங்களுக்குத் தேர்வு எழுதுவது எளிமையாக இருக்கும். நாம் படிக்கும் பாடங்களை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி படித்தால் வெற்றி நிச்சயம்.

தேர்வறையில்

தேர்வறையில்

நான் நன்றாகத் தான் படிக்கிறேன் ஆனால் எனக்குத் தேர்வறையில் எதுவே நினைவுக்கு வரவில்லை என்று நீங்கள் கூறினால் நீங்கள் அப்பாடங்களை ஆழமாக நீங்கள் படிக்கவில்லை என்று அர்த்தம். மேலோட்டமாக படித்தது எதுவும் நம் நினைவில் நிற்காது. ஒரு முறை தோற்றால் தவறில்லை ஆனால் மீண்டும் மீண்டும் தோற்பது தான் தவறு. பள்ளியில் சில மாணவர்கள் வீட்டிலேயேப் படித்து விட்டு இங்கு வந்து விளையாடுவார்கள். அதைப் பார்த்துப் படிக்காத மாணவர்கள் ஏமாந்துப் போய் விடுவர்.

சரியாக வராது

சரியாக வராது

நம் நண்பர்கள் தான். ஆனாலும் யாரையும் படிக்கும் விஷயத்தில் நம்பக் கூடாது. நான் தேர்வில் நிச்சயம் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கையோடு தேர்வு எழுதச் செல்லுங்கள். நான் தோல்வி அடைந்து விடுவேனோ என்று ஒரு போதும் நினையாதீர்.உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை எப்போதும் படி படி என்றுக் கூறாமல் அவர்கள் அருகில் அமர்ந்து அவர்களுக்குப் படிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். தேர்வில் தோல்வி அடைந்தால் உங்கள் பிள்ளைகளைத் திட்டாதீர்கள் அதற்கான காரணத்தை அவர்களிடம் கண்டறியுங்கள்.

மதிப்பெண்கள் அல்ல

மதிப்பெண்கள் அல்ல

தேர்வு என்பது வெறும் மதிப்பெண்கள் அல்ல உன் திறமைகளைக் கண்டறியும் தேர்வு அது. திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம். தோல்வியால் சிலர் தவறான முடிவுகள் எடுக்கின்றனர். படிப்பில் தோற்ற சிலர் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியுள்ளனர். எனவே மாணவர்களே தேர்வைக் கண்டு அஞ்சாமல் பாடங்களைப் புரிந்துப் படியுங்கள். வெற்றி உங்கள் வசமே. பிறகென்ன தேர்வுக்கு ஜாலியாக தயாராகுங்கள் பிள்ளைகளே.

English summary
We should not target marks always and we should aim to achieve something with our ability and positive approach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X