மனசு தூண்ட வேண்டும்.. உங்களை ஊக்கப்படுத்தணும்!
மனசை எதையாவது போட்டு நிரப்பி வைக்கக் கூடிய பாத்திரமாக மாற்றி விடாதீர்கள். அது நமது செயல்களைத் தூண்டி விடக் கூடிய தூண்டுகோலாக மாற்றி வையுங்கள்.
மனசுதான் உங்களை ஊக்கப்படுத்தி செயல்பட வைக்கும். மனதை எப்போதும் லேசா வச்சுக்கங்க. எதையாவது நினைத்து மனசை போட்டு அலட்டிக்காதீங்க.
எதையும் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
லாக்டவுன் இப்டியே தொடர்ந்தா நீங்க இப்டித்தான் ஆவீங்க பாஸ்... விஜய் ஸ்டைல்ல ஒரு குட்டி ஸ்டோரி!

மனதின் மகிழ்ச்சி
மனசுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். உங்களுக்குப் பிடித்தவரோடு நேரம் செலவிடுங்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூறுங்கள். அதை விட பெரிய சந்தோஷம் உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க.

புத்துணர்வான மனசு
தினமும் காலை யோகா தியானம் செய்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சிப் பெறுகிறது. இன்றைக்கு இந்த வேலையை வெற்றிகரமாக நான் முடித்துவிடுவேனா என்று கவலைப்படாமல் என்னால் முடியாமல் வேறு எவரால் முடியும் என்று நினைத்து செயல்படுங்கள். வெற்றி என்றும் உங்கள் வசம் தான்.

எண்ணங்கள் உயர்த்தும்
மனம் மகி்ழ்ச்சியாக இருந்தால் புது புது எண்ணங்கள் தோன்றும். அந்த எண்ணங்கள் உங்களை வாழ்வில் உயர வைக்கும். கவலைகள் நிரந்தரமல்ல. இதுவும் கடந்து போகும் என்று எண்ணம் உடையவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். மனதுக்குப் பிடித்தவரோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

முகத்தில் புன்னகை
மனதில் மகிழ்ச்சி இருந்தால் தான் முகத்தில் புன்னகை இருக்கும். கவலைகளை மூட்டைக் கட்டி வையுங்கள். அன்றாட கவலைகளை அன்றே மறந்து விடுங்கள். ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்குங்கள். உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை. உள்ளம் என்பது பூந்தொட்டியாக இருக்க வேண்டும்.புது மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்.