For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Monday Motivation: பேசாதீங்க.. எதையுமே செயலில் காட்டுங்க.. சிறப்பா முடியும் எல்லாமே!

Google Oneindia Tamil News

சிலருக்கு எல்லாம் தெரிந்திருக்கும். ஆனால் அதை சரியாக பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்தாத போது எல்லாம் தெரிந்திருந்தும் அது பயன்படாமல்தான் போகும்.

எனக்கு இது தெரியும், அது தெரியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட அதை பயன்படுத்தி தெரிந்த அறிவை வெற்றிகரமாக மாற்றுவதில்தான் நமது சிறப்பு இருக்கிறது.

அறிவும், ஞானமும் பயன்பாட்டுக்கு வரும்போதுதான், அதனால் நாலு பேருக்கு நன்மை விளையும்போதுதான் அதன் மதிப்பே தனித்து தெரியும். அதை நாம் பயிற்சிக்குக் கொண்டு வர வேண்டும்.

 கூறினால் போதாது

கூறினால் போதாது

எனக்குக் கணக்குப் போட நன்றாக வரும் என்று கூறினால் மட்டும் போதாது. நமக்குத் தெரிந்த கணக்கை நான்கு பேருக்காவது கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களிடம் இருக்கும் திறமை வெளிப்படும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். அதுபோல் நம்மிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே அதனுடைய மதிப்புத் தெரியும்.

 வசுமதி வளர்மதி

வசுமதி வளர்மதி

ஒரு ஊரில் வசுமதி வளர்மதி என இருவர் இருந்தனர். இருவரும் நன்றாகப் படித்தனர். இருவருக்கும் தட்டச்சு செய்ய நன்றாகத் தெரியும். வசுமதி இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்றாள். வளர்மதியோ இளங்கலைப் பட்டம் கணினியில் பெற்றாள். ஆனால் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. தான் கற்ற தட்டச்சை முதலாகக் கொண்டு நீதிமன்ற வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள் வளர். ஆனால் வசுமதியோ எந்த முயற்சியும் செய்யவில்லை.

 அயராத முயற்சியால் கிடைத்த வேலை

அயராத முயற்சியால் கிடைத்த வேலை

தன் அயராத முயற்சியால் நீதிமன்றத்தில் வேலை இன்று வளர்மதிக்குக் கிடைத்துவிட்டது. அதற்கு வசுமதியின் அம்மா உனக்கும் தட்டச்சுத் தெரியும் தானே உன் தோழி வளர்மதி தட்டச்சின் மூலம் வேலை வாங்கிவிட்டாளே என்றார். அதற்கு வசுவோ அம்மா எனக்கு அவளை விட நன்றாகவே நான் தட்டச்சு செய்வேன் என்றாள். அதற்கு அவள் அம்மா திறமை என்னிடம் இருக்கிறது என்றால் உலகம் நம்பாது அத்திறமையைக் கொண்டு வாழ்வில் ஜெயித்துக் காட்ட வேண்டும்.

 எல்லாம் தெரியும்

எல்லாம் தெரியும்

உலகம் உனக்கு எல்லாம் தெரியும் என்று கூறினால் நம்பாது. உனக்குத் தெரியும் என்பதை நீ நிரூபித்தால் மட்டுமே உலகம் நம்பும். சிலர் இது தானே இது எனக்கு செய்யத் தெரியுமே என்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள். நம் வீட்டிலும் அப்படித்தான். நானும் உங்கள் அம்மாவைப் போல சமைப்பேன் என்றுக் கூறும் அப்பாவை விட நமக்குப் பிடித்தவற்றைச் சமைத்து அறுசுவை விருந்து வைக்கும் தாய்க்குத் தான் மதிப்பு அதிகம்

English summary
Monday Motivation: EVeryone, pl get in action always, instead of speech, that will bring the success you need.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X