For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதின் சங்வான் ஐஏஎஸ்.. சென்னையில் படித்தவர்.. பிளஸ்2 மார்க் சீட்டை வெளியிட்டு சொன்ன சூப்பர் மெசேஜ்

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: 12வது தேர்வில் வேதியியல் பாடத்தில் ஜஸ்ட் பார்டரில் பாஸ் செய்தவன் தான் நான்.. என்று ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் வெளியிட்ட அவரது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் அமைக்கப்படும் சிமார்ட் சிட்டி திட்டத்தின் சிஓவாக இருப்பவர் நிதின் சங்வான் ஐஏஎஸ். இவர் அஹமதாபாத் மாநகராட்சியின் துணை ஆணையராகவும் உள்ளார்.

ஹரியானாவில் பிறந்த நிதின் சங்வான், ஹரியானாவில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பின்னர் சென்னை ஐஐடியில் எம்பிஏ படித்து பட்டம் பெற்றார். அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வுக்கு படித்தார். 2015ம் ஆண்டு இந்தியாவிலேயே 28வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். குஜராத் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகரியாக உள்ளார்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

76 சதவீதம் மதிப்பெண்

76 சதவீதம் மதிப்பெண்

நிதின் சங்வான் 10ம் வகுப்பு தேர்வில் வெறும் 76 சதவீதம் மதிப்பெண் எடுத்துதான் தேர்ச்சி பெற்றுள்ளார். 2012ல் 12ம் வகுப்பு தேர்வை முடித்த இவர் அந்த தேர்வில் வேதியியல் பாடத்தில் ஜஸ்ட் பார்டரில் பாஸ் செய்திருக்கிறார். அதாவது வேதியியல் தியரியில் 22 மார்க் எடுத்தால் பாஸ் என்கிற நிலையில் 24 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

64 சதவீத மதிப்பெண்

64 சதவீத மதிப்பெண்

ஐஏஎஸ் அதிகாரி நிதின் சங்வான் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 64 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர் தான். ஆனால் அந்த மதிப்பெண் அவரது வாழ்க்கையில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவரது உழைப்பு முயற்சி பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. சராசரி மாணவரான நிதின் சங்கான் பின்னாயில் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

எதிர்காலம்

எதிர்காலம்

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பில் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து எடைபோட வேண்டாம். இதுபற்றி நிதின் சங்வான் ஐஏஎஸ் அவர்களே தனது டுவிட்டரில் கூறும் போது, எனது 12 ம் வகுப்பு தேர்வில், வேதியியலில் எனக்கு 24 மதிப்பெண்கள் கிடைத்தன - தேர்ச்சி மதிப்பெண்களுக்கு 1 மதிப்பெண் கூடுதலாக பெற்றேன். ஆனால் என் வாழ்க்கையிலிருந்து நான் என்னவாக விரும்புகிறேன் என்று அது தீர்மானிக்கவில்லை

வாழ்க்கை பெரியது

வாழ்க்கை பெரியது

எனவே மதிப்பெண்களின் சுமையுடன் குழந்தைகளை ஏமாற்ற வேண்டாம். பள்ளி தேர்வு முடிவுகளை விட வாழ்க்கை பெரியது. தேர்வு முடிவுகள் உங்களின் நோக்கத்திற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும். மாறாக விமர்சனத்திற்கான வாய்ப்பு அல்ல " இவ்வாறு கூறியுள்ளார். இவரது ட்விட் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 23 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளளனர். 6500க்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளார். சுமார் 600க்கும் மேற்பட்டோர் இவரது கருத்தை ஆதரித்து நன்றி கூறியுள்ளனர். மாணவர்கள் பள்ளியில் எடுக்கும் மதிப்பெண் அவர்களின் வாழ்க்கையை மாற்றாது என்பது நிதின் சங்வான் ஐஏஎஸ்ஸின வாழ்க்கை ஒரு பாடமாகும்.

English summary
motivational story: Nitin Sangwan IAS share his 12 th exam mark sheet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X