• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி!

|

சென்னை: பிளஸ்டூ ரிசல்ட் வந்தாச்சு.. நிறையப் பேர் தேர்ச்சி ஆகியிருக்காங்க.. சிலருக்கு தோல்வி.. இருவருமே ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டிய நேரம் இது.

இன்னைக்கு வந்த பிளஸ் 2 மார்க்கில் பெயில் ஆயிட்டாலோ, அல்லது மார்க் குறைவாக வந்துவிட்டாலோ தயவு செய்து தளர்ந்து போகாதீங்க. முக்கியமாக, இது போன்று தளர்ந்து கிடப்பவர்களிடம் பெற்றோர்கள் கொஞ்சம் அமைதியாகவும், அனுசரித்தும் போனாலே போதும்.

என்ன பண்றது.. கஷ்டப்பட்டுதான் படிச்சீங்க.. ரிசல்ட் வரலை அதுக்கு மேல என்ன பண்றது? ஜஸ்ட் மனசை ரிலாக்ஸ் ஆக்கிட்டு அடுத்து செய்ய வேண்டியதுக்கு பிளான் பண்ணலாம்.

சைலன்டா மாணவிகளை முந்தும் மாணவர்கள்... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..? சைலன்டா மாணவிகளை முந்தும் மாணவர்கள்... பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?

எதுக்கு லாயக்கு?

எதுக்கு லாயக்கு?

"நான் அப்பவே சொன்னேனே.. நீ பெயில்தான் ஆவேன்னு.. நீ ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி ஆயிருக்குமா? என் மானம் போச்சே.. மரியாதை போச்சே.. சொந்தக்காரங்க கேட்டால் நான் என்ன பதில் சொல்லுவேன்? இது எதுக்குதான் லாயக்கு? இதுக்குதானா பணத்தை கொட்டி படிக்க வெச்சேன்" இப்படிப்பட்ட வார்த்தைகளை நொந்து போய், பயந்து போய் இருக்கிற குழந்தைகளிடம் சொல்லாமல் இருந்தாலே போதும்.

அன்பு

அன்பு

தாம் தூம் என குதிக்க போய், அந்த பிள்ளைகள் தேவையில்லாத முடிவுகளை எடுக்க பெற்றோர்களே வித்திட்டு விடக் கூடாது. திட்டுவதை எல்லாம் திட்டிட்டு, "ஐயோ.. இப்படின்னு தெரிஞ்சா திட்டியே இருக்க மாட்டேனே.. கேள்வி கேட்டிருக்க மாட்டேனே"...ன்னு கதறி ஒப்பாரி வைக்கும் நிலையும் வேண்டாம். அன்பைப் பொழிய வேண்டிய நேரம் இது. இங்குதான் ஒரு பெற்றோர் தங்களது உள்ளன்பை பிள்ளைகளுக்கு சரியான முறையில் புரிய வைக்க முடியும்.

ஆப்ஷன்கள்

ஆப்ஷன்கள்

பாடு பட்டு படிக்க வைத்த குழந்தைகள் பெயில் ஆகிவிட்டால் வருத்தம்தான், கவலைதான்.. ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இன்று இல்லை. தட்டிக் கொடுங்க.. ரிலாக்ஸ் கண்ணா, செல்லமேன்னு சொல்லுங்க. அவங்களுடன் இன்று முழுவதும் இருங்க. இதை விட்டால் என்ன அடுத்து படிக்க நிறைய இருக்கு என்று நிறைய ஆப்ஷன்களை அவர்களுக்கு விளக்குங்க. தன்னம்பிக்கை ஊட்டுங்க.

எதிர்காலம்?

எதிர்காலம்?

குழந்தைகள்தான் உங்கள் சொத்து. வெறும் மார்க்குக்காக அவர்களை இழந்துவிட்டால், உங்களுக்கே ஏது எதிர்காலம்? வீட்டு பெரியவர்கள்தான், சவால்களை சமாளிக்க கற்று கொடுத்து, கோழைத்தனங்கள் பக்கம் எண்ணங்கள் போகாமல் தைரியத்தை தர வேண்டும்.

அடுத்த வருஷம்

அடுத்த வருஷம்

இதேதான் மாணவர்களுக்கும்.. பிளஸ் 2 தேர்வு ஒவ்வொருக்கும் ரொம்பவும் முக்கியமானதுதான். தான் எதிர்காலத்தில் என்னவாக இருக்க போகிறோம் என்பதை தீர்மானிப்பதுதான்... இந்த மார்க்கில் தான் எதிர்காலமே அடங்கி உள்ளது என்பதெல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுதான். அதற்காக ஏடாகூட சிந்தனை மட்டும் யோசிக்க கூடாது. இந்த வருஷம் இல்லைன்னா, அடுத்த வருஷம்.. அவ்வளவுதான்!

கொஞ்சம் யோசிங்க

கொஞ்சம் யோசிங்க

அதைவிட்டு நெகட்டிவ் சிந்தனையை மட்டும் கையில் எடுத்துட்டா, முதலுக்கே மோசமாகிவிடும். நீங்கதான் உலகம், நீங்கதான் வாழ்க்கைன்னு நினைச்சுக்குட்டு உயிரை கையில பிடிச்சிட்டு உங்க அம்மா, அப்பா இருக்காங்க... அவங்கள பத்தியும் கொஞ்சம் யோசித்து பாருங்க..

ஃபீனிக்ஸ் பறவை

ஃபீனிக்ஸ் பறவை

தயவு செய்து தன்னம்பிக்கையை வளர்த்துக்குங்க.. எதையும் சமாளிக்கிற துணிச்சலை நீங்களே உருவாக்குங்க.. மானத்தை இழந்து உயிரிழக்கும் கவரிமானைவிட, எத்தனை முறை விழுந்து நெருப்பு சாம்பலில் புரண்டாலும், மீண்டு உயிர்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாய் இருப்பதே இப்போதைக்கு முக்கியம்!

அட்வைஸ்

அட்வைஸ்

பிறகு பாஸ் செய்த மாணவர்களுக்கு ஒரு குட்டியூண்டு அட்வைஸ்... பாஸ் ஆயாச்சு.. ஸோ மார்க் பத்திக் கவலையே படாதீங்க.. பாஸ் ஆயாச்சு.. அது போதும்.. அதற்கேற்ப படிக்க நிறைய படிப்பு இருக்கு செல்லங்களா.. எனவே மார்க்கைப் பற்றிக் கவலைப்படாமல் அதை வைத்து எதைப் படிக்கலாம் என்ற வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்க போதும்.. சரியா.

English summary
Students who have failed in the Plus Two examination should not lose hope and They should develop self-confidence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X