• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றி என்பது முடிவல்ல.. தொடக்கம்!

Google Oneindia Tamil News

பல பேர் நினைப்பார்கள்.. ஆஹா.. நாம் வெற்றி பெற்று விட்டோம்.. எல்லோரையும் விட நாமதான் முதலில் என்று பலர் கருதுவார்கள். அது உண்மையல்ல.. வெற்றி என்பது என்னவென்றால் இதற்கு முன்பு நீங்கள் சுமாராக செய்ததை இப்போது சிறப்பாக செய்துள்ளீர்கள் என்றுதான் பொருள். இது நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.

வெற்றி என்பது தொடக்கமே தவிர முடிவல்ல.. வெற்றிகள் தொடரும்போதுதான் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் முடியும்.. நிறையப் பேர் இதை மனதில் கொள்வதில்லை. வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள மேன்மேலும் உழைக்க வேண்டும்.

Success is not the end

வெற்றிக்காகப் போராடும் நாம் வெற்றி கிட்டியவுடன் அது நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது. சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியம். கடினமான உழைப்பும் முயற்சியும் அவசியம். வெற்றி அடைவதற்கு நாம் போராட வேண்டுமென்றால் அந்த வெற்றி நம்முடனே இருப்பதற்கு இன்னும் அதிக முயற்சி வேண்டும்.

அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

நாம் நம் இலக்குகளை அடைய தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும். கடின உழைப்பும் சிறந்த பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

உங்களால் முடியும் என்று நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுவது ஒரு சுகம் என்றால் அந்த வெற்றியைத் தக்க வைப்பதில் ஏற்படும் சுகம் இன்னும் அதிகம். எல்லா செயல்களிலும் வெற்றி பெறுங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே இருங்கள்.

English summary
Success is not the end, but it is the beginning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X