For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில்லாமல் கனவு காணுங்கள்!

Google Oneindia Tamil News

இளைஞர்களே கனவு காணுங்கள்.. இது நமது அப்துல் கலாம் அவர்கள் பொறித்து வைத்து விட்டுப் போன பொன்மொழி.

இன்று கனவு காண்பது குறைந்து விட்டது. முன்பெல்லாம் லட்சிய வேட்கையுடன் இருப்பார்கள். குறித்த இலக்கை நோக்கி ஓய்வின்றி உழைப்பார்கள். அந்த நிலை மீண்டும் வரும்போதுதான் நாடு வல்லரசாக முடியும்.. நாமும் உயர்ந்த நிலையை எட்ட முடியும்.

சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள்.. எல்லையில்லாமல் கனவு காணுங்கள்... அதுதான் உங்களது இலக்குகளை உங்களை நோக்கி இட்டு வரும்.. கனவுகள் இல்லாத மனிதன் வெற்று பாத்திரம் போல.. இலக்கு இல்லாமல் நடக்கும் கால்கள் போல.. கனவுகள்தான் உங்களை உயிர்ப்பிக்கும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்

 மனிதனுக்கு கிடைத்த வரம்

மனிதனுக்கு கிடைத்த வரம்

கனவு என்பது மனிதனுக்கு வாய்த்த வரம். நம் மனதின் எண்ணங்களே குறிக்கோள்களே கனவுகளாக வருகிறது. உறக்கத்தின் போது வருவது கனவு அல்ல நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு. என் வாழ்க்கையில் நான் இந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்பதே உங்கள் கனவாக இருக்கட்டும். முண்டாசுக்கவிஞன் பாரதி கூட சுதந்திரப் போராட்டத்தின் போது ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தன் கனவைப் பாடினார். அவருடைய கனவு நிஜமானது.

 கலாமின் கனவு

கலாமின் கனவு

உங்களுக்கு உணவு வேண்டும் என்பதோடு நில்லாமல் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று நினைப்பதே கனவு. 2020ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று திரு. அப்துல்கலாம் அவர்கள் கனவு கண்டார். இன்று உலகெங்கும் கொரோனா தாக்குதல் இருந்தபோதும் மற்ற நாடுகளுக்கு மருத்துவ உதவி செய்வதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது.

 பயணம் செய்யுங்கள்

பயணம் செய்யுங்கள்

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு கனவு இருக்கும். அந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள். இடையில் வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் கனவை நனவாக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் முயற்சி திருவினையாக்கும் கனவு மெய்ப்படும். கல்பனா சாவ்லா அவர்கள் சிறுவயதிலேயே விண்வெளிப் பயணத்தில் பயணம் செய்ய வேண்டும் எனக் கனவு கண்டார்.அதற்கான முயற்சியில் இறங்கினார். இறுதியில் கனவு மெய்ப்பட்டது.

 தீர்மானியுங்கள்

தீர்மானியுங்கள்

உங்கள் இலக்கை நீங்கள் தீர்மானியுங்கள். அடிக்கடி கனவு காணுங்கள். கனவை நனவாக்க முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றிப் பெறுவீர்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் இருக்கிறான். அதனால் தான் கலாம் அவர்கள் இளைய தலைமுறையினரைப் பார்த்து கனவு காணுங்கள் என்றார். இளைஞர்கள் நம் வருங்கால இந்தியாவின் தூண்கள் அவர்கள் நினைத்தால் இந்தியாவின் தரத்தை உயர்த்த முடியும் என்றெண்ணியே அவ்வாறு கூறினார். நீங்களும் கனவு காணுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்

English summary
Dream for everything, said former President Abdul Kalam. Yes that is true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X